மூக்குத்தி அம்மன் 2-வில் ரெஜினினா எதுக்கு? மாஸ்டர் பிளான் செய்யும் இயக்குநர் சுந்தர் சி!

மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ள ரெஜினா படத்திற்காக 1 கோடி சம்பளம் வாங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

mookuthi amman 2

சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.100 கோடி வசூல் செய்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர் சி ஆரம்ப காலத்தில் இருந்த பீக்கிற்கு வந்துவிட்டார் என்று தான் சொல்லவேண்டும். இதன் காரணமாக  அவருக்கு பட வாய்ப்புகளும் குவிய தொடங்கி இருக்கிறது.

அந்த வகையில் அவர் அடுத்ததாக மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தினை நயன்தாராவை வைத்து இயக்குவதற்கான வாய்ப்பை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் கொடுத்துள்ளார். ஏற்கனவே, படத்தின் முதல் பாகம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அதனுடைய இரண்டாவது பாகமாக இல்லாமல் சுந்தர் சி கதையாகவே உருவாகவிருக்கிறது.

பெயர் மட்டும் மூக்குத்தி அம்மன் 2 என வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது. பூஜையில் சுந்தர் சி, மீனா, நயன்தாரா, குஷ்பூ, ஜெயம்ரவி , ரெஜினா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டார்கள். கலந்து கொண்டவர்கள் பலரும் என்றால் படத்தில் நடிக்கப்போவது நயன்தாரா, ரெஜினா ஆகியோர் மட்டும் தான். இன்னும் நடிப்பவர்கள் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

இருப்பினும், இவர்கள் இருவரும் நடிப்பது மட்டும் உறுதியாகியுள்ளது. படத்திற்கான பூஜையில் ரெஜினாவை பார்த்த பலரும் இந்த படத்தில் அவருக்கு என்ன மாதிரியான கதாபாத்திரம்? எனவும், ஒரு வேலை பாடலுக்கு நடனம் ஆடப்போகிறாரா? எனவும்  கேள்விகளை எழுப்ப தொடங்கிவிட்டார்கள். அவர்களுக்காகவே ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.

அது என்னவென்றால், ரெஜினாவுக்கு படத்தில் முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. பாடல்களுக்கு மட்டும் நடனம் ஆடுவது என்றால் நிச்சயமாக சுந்தர் சி சர்ப்ரைஸாக வைத்திருந்திருப்பார். ரெஜினா பூஜைக்கே நேரடியாக வந்த காரணத்தால் நிச்சயமாக முக்கியமான கதாபாத்திரத்தில் தான் நடிக்கவுள்ளார். அது மட்டுமின்றி படத்தில் நடிப்பதற்காக அவர் ரூ.1 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

மற்றபடி படத்தில் வழக்கமாக சுந்தர் சி படங்களில் இருக்கும் பாடல்கள் இடம்பெறும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. சுந்தர் சியுடன் ஹிப் ஹாப் தமிழாவும் இணைந்துள்ள காரணத்தால் பாடல்கள் தாறுமாறாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. விரைவில் படம் பற்றிய அடுத்தடுத்த அப்டேட்டுகள் வெளியாகவுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்