லைகா விவகாரம்: நடிகர் விஷால் மீது ஏன் அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது – உயர்நீதிமன்றம் கேள்வி!

vishal HC

லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கில், நடிகர் விஷால் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாததால், அவர் மீது ஏன் அவமதிப்பு வழக்கு தொடரக்கூடாது என்று உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 

நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் படத்தயாரிப்புக்காக, 21 கோடியே 29 லட்சம் ரூபாயை கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து கடனாக பெற்றிருந்தது. பிறகு, இந்த கடன் தொகையை லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது. இந்நிலையில், விஷாலும், லைகா நிறுவனமும் கடனை ஏற்று செலுத்துவது தொடர்பான ஒப்பந்தத்தில் கடன் தொகை முழுவதும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்குவதாக உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும், தங்களுக்கு கொடுக்கவேண்டிய 21 கோடியே 29 லட்சம் ரூபாயை வழங்காமல், விஷால் “வீரமே வாகை சூடும்” என்ற படத்தை வெளியிடவும், சாட்டிலைட் மற்றும் ஓடிடி உரிமையை விற்க தடை விதிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், லைகா நிறுவனத்திற்கு நடிகர் விஷால் கொடுக்க வேண்டிய ரூ.21.29 கோடியில், ரூ,15 கோடியை நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் உத்தரவிட்டது.

இதற்கிடையில், இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில்நடிகர் விஷால் நடிப்பில் உருவான ‘மார்க் ஆண்டனி’ செப்டம்பர் 15-ஆம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முன்னதாக, லைக்கா நிறுவனம் தொடர்ந்த வழக்கில் படத்தை வெளியீட சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்திருந்தது. இதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி நடிகர் விஷால் விளக்கமளித்த நிலையில், மார்க் ஆண்டனி படத்துக்கான தடை நீக்கப்பட்டது.

அப்போது, 2021ம் ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் இந்தாண்டு செப்டம்பர் வரையிலான நடிகர் விஷாலின் 4 வங்கி கணக்கு விவரங்களை தாக்கல் செய்யவும் நடிகர் விஷால் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்து விவரங்களை தாக்கல் செய்ய நடிகர் விஷாலுக்கு செப்டம்பர் 19ம் தேதி நேரில் ஆஜராக உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இதனை அடுத்து, செப்டம்பர் 19ம் தேதி நேரில் ஆஜராகாத விஷாலின் 4 வங்கி கணக்கு விவரங்களையும் விஷால் மற்றும் அவரது குடும்பத்தினரின் அசையும், அசையா சொத்து விவரங்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யததால், நடிகர் விஷால் இன்று (செப்டம்பர் 22ம் தேதி)  நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

அதன்படி, இந்த வழக்கு இன்று காலை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது, அப்போது விஷால் ஆஜராகினார். விஷால் தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கு தொடர்பாக மூத்த வக்கீல் ஆஜராக உள்ளதால், விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த உயர்நீதிமன்ற நீதிபதி, கடந்த 19ம் தேதி நேரில் ஆஜராகாத விஷால், தனது சொத்து விவரங்களை தாக்கல் செய்ய தவறிவிட்டார்.

வேண்டுமென்றே இந்த வழக்கில் நடிகர் விஷால் அலட்சியம் காட்டுகிறார். நீதிமன்றத்தை பொருத்துவரையில் அவர், இவர் என பாரபட்சம் கிடையாது, எல்லாரும் சமம் தான். இதனால், நீதிமன்ற உத்தரவை மதிக்காத நடிகர் விஷால் மீது ஏன் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கூடாது? இத்தனை ஆண்டுகள் நடித்தும் கடன் இருப்பதாக கூறுவது எப்படி? சட்டத்தை விட மேலானவர் என நினைக்கிறீர்களா? என பணத்தை திரும்ப தராத விவகாரத்தில் விஷாலுக்கு அடுக்கடுக்காக கேள்விகள் எழுப்பி, இந்த வழக்கின் விசாரணயை செப்டம்பர் 25ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்