நடிகை பிரியா பவானி சங்கர் ராஜ்வேல் ராஜேஷ் என்பவரை காதலித்து வருகிறார். இவர்கள் இருவரும் நீண்ட ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். இதனை பிரியா பவானி ஷங்கரே பல பேட்டிகளில் வெளிப்படையாக தெரிவித்ததும் உண்டு. குறிப்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு கூட புதியதாக வீடு கட்டிக்கொண்டு அதற்கான புகைப்படத்தையும், தனது காதலருடைய புகைப்படத்தையும் வெளியீட்டு இருந்தார்.
இந்நிலையில், பொதுவாவாக சினிமாத்துறையில் இருக்கும் சில நடிகைகள் தங்களுடைய காதலர்களை பற்றி கூறமாட்டார்கள். ஆனால் பிரியா பவானி ஷங்கர் அதனை ரகசியமாக வைத்துக்கொள்ளாமல் வெளிப்படையாகவே கூறியுள்ளார். அதற்கு என்ன காரணம் என்பதை பற்றி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய அவர் ” காதல் உறவை எதற்காக மறைக்கவேண்டும். நான் கல்லூரி படித்துக்கொண்டிருந்த சமயத்தில் இருந்து காதலிக்கிறேன். இங்க யாரும் காதலிக்காமல் இல்லை. காதல் என்பது யாரும் பண்ணகூடாத விஷயமா..? இங்கு எல்லாரும் காதல் செய்கிறார்கள்.
4-ஆம் வகுப்பு படிப்பவர்களுக்கு கூட ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள். நான் ஒன்னும் திடீர் என்று புகைப்படங்களை வெளியிடவில்லை. ஏன்னுடைய வேலை இப்போது மாறிவிட்டது. அதனால் நான் புகைப்படங்களை வெளியிடமாட்டேன் என அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. நான் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து காதல் செய்கிறேன். அது அப்படியே தொடர்ந்து கொண்டு இருக்கிறது. அதில் ஒன்னும் தப்பு இல்லை” என அதிரடியாக கூறியுள்ளார்.
மேலும் பிரியா பவானி ஷங்கர் நடிப்பில் சமீபத்தில் வெளியான பொம்மை திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்ததாக இந்தியன் 2, டிமாண்டி காலனி 2, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மும்பை : பாலிவுட் சினிமாவில் பல படங்களில் நடித்து பிரபலமான நடிகர் சயிப் அலிகான் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம்…
சென்னை : பொங்கல் பண்டிகை விடுமுறையை குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் பிரபலமான இடங்களில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவும்…
சென்னை : விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 10-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அடுத்ததாக…
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி - மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை…
சென்னை : தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இந்த போட்டியில்…
மும்பை : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக விளையாடவுள்ள இந்திய வீரர்கள் குறித்த விவரத்தை இன்னும் பிசிசிஐ இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.…