நீ என்ன எப்பவும் சீரியஸாக இருக்க சிரிக்க மாட்டியா? அந்த இயக்குனரை பார்த்து கடுப்பான ரோஜா!

நடிகை ரோஜா திரைத்துறையில் நடிக்க நுழைந்த ஆரம்ப காலகட்டத்தி இருந்தே நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். அது மட்டுமின்றி படங்களில் ஹீரோயினாக நடிப்பது மட்டும் மின்றி மற்ற படங்களில் ஒரு பாடலில் நடனமாடுவது , மற்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதிலும் நடித்து வருகிறார்.
பொதுவாகவே நடிகைகள் என்றாலே தங்களுக்கு ஹீரோயின் ரோல்கள் கிடைத்து முக்கிய துவம் இருக்கும் கதாபாத்திரங்கள் இருந்தால் மட்டும் தான் நடிப்பார்கள். ஆனால், நடிகை ரோஜா அப்படியெல்லாம் பார்க்காமல் எந்த காதாபாத்திரம் கொடுத்தாலும் அருமையாக நடித்து கொடுத்துவிடுவார். அது மட்டுமின்றி படப்பிடிப்பு சமயங்களிலும் நன்றாக ஜாலியாக இருப்பாராம்.
படப்பிடிப்பு சமயத்தில் மற்றவர்கள் சீரியஸாக இருந்தால் ரோஜாவுக்கு சுத்தமாக பிடிக்கவே பிடிக்காதாம். அப்படி தான் ஒரு முறை பிரபல இயக்குனரான லிங்கு சாமி உன்னிடத்தில் என்னை கொடுத்தேன் படப்பிடிப்பின் போது மிகவும் சீரியஸாக இருந்த காரணத்தால் ரோஜா சற்று கடுப்பாகி நீ என்ன எப்பவும் சீரியஸாக இருக்கா சிரிக்க மாட்டியா? என்று கேட்டாராம்.
அந்த சமயம் படங்களை இயக்க முடியாமல் கதையை வைத்து கொண்டு பல இயக்குனர்களுடன் லிங்கு சாமி உதவி இயக்குனராக பணியாற்றி வந்தாராம். அப்படி தான் “உன்னிடத்தில் என்னை” திரைப்படத்தில் இயக்குனர் விக்ரமனிடம் உதவி இயக்குனராக பணியாற்றினாராம். இந்த படத்தில் பணியாற்றும்போது பெரிய இயக்குநராக வேண்டும் என்பதற்காகவே தீவிரமாக படத்தின் இயக்குனர் போல வேலை செய்தாராம்.
இதனாலே படப்பிடிப்பு நடந்துகொண்டிருந்த சமயத்தில் எல்லாம் சிரிக்காமல் மிகவும் டென்ஷனுடன் படத்தை பற்றிய கவனத்தில் தான் லிங்கு சாமி இருப்பாராம். இதனை தொடர்ச்சியாக கவனித்து கொண்டிருந்த நடிகை ரோஜா ஒரு முறை இயக்குனர் லிங்கு சாமியை அழைத்து எதற்காக எப்ப பாத்தாலும் சீரியஸாக இருக்க? உனக்கு சிரிப்பு வராத வேலையை சிரித்துக்கொண்டு செய் என்று அட்வைஸ் கொடுப்பாராம்.
பிறகு அவரிடம் ஒரு கதையை இருப்பதாய் தெரிந்துகொண்ட நடிகை ரோஜா அவருடைய சகோதரர் ஒருவரை அழைத்து கொண்டு லிங்கு சாமி ஒரு கதை வைத்திருப்பதாகவும் அந்த கதையை கேட்டுவிட்டு படமாக எடுக்க முடியுமா என்பதை பார் எனவும் கூறினாராம். அந்த சமயம் பலமுறை ரோஜா இயக்குனர் லிங்கு சாமிக்கு பல அட்வைஸ் செய்து இருக்கிறாராம். இதனை நெகிழ்ச்சியுடன் லிங்கு சாமி பல பேட்டிகளிலில் தெரிவித்து இருக்கிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025