அந்த விஷயத்துக்கு என்னை ஏன் நம்புனீங்க.? ஹிப்ஹாப் ஆதி பளீச் கேள்வி.!

Hiphop Tamizha Adhi

Hiphop Tamizha Adhi : இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்குனர் சுந்தர் சி யிடம் வெளிப்படையாக கேள்வி ஒன்றை கேட்டுள்ளார்.

இயக்குனர் சுந்தர் சி மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா ஆதி கூட்டணி ஒரு படத்தில் இணைந்தது என்றாலே அந்த படத்தின் பாடல்கள் எல்லாம் பெரிய அளவில் ஹிட் ஆகி விடும். அப்படி தான் இவர்களுடைய கூட்டணி இதுவரை அரண்மனை, ஆம்பளை, அரண்மனை 2, கலகலப்பு 2, வந்தா ராஜாவா தான் வருவேன், ஆக்சன், அரண்மனை 4 ஆகிய படங்களின் பாடல்கள் எல்லாம் ஹிட் ஆகி இருக்கிறது.

இருவரும் சேர்ந்து பல படங்களில் ஒன்றாக பணியாற்றியதன் காரணமாக இவர்களுக்கு இடையே நல்ல நட்பும் இருக்கிறது.  இவர்களுடைய கூட்டணியில் கடந்த மே 3-ஆம் தேதி வெளியான அரண்மனை 4 நல்ல வரவேற்பை பெற்றுக்கொண்டு வருகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக சுந்தர் சி ஊடகம் ஒன்றுக்கு பேட்டி கொடுக்க வந்து இருந்தார்.

அந்த சமயம் அவரிடம் வீடியோ கால் மூலம் சுந்தர் சி கேள்வி ஒன்றை கேட்டுள்ளார். அதில் ஹிப்ஹாப் தமிழா ஆதி கேட்ட கேள்வி “அரண்மனை 4 படத்தில் யோகி பாபு பேயை அடக்க முடியும் என்று வக்கீல் நம்பினார் ஓகே நம்ம எப்படிடா அதை நம்புனோம் என்று சொல்வாரு அதே தான் உங்களிடம் கேட்கிறேன் அரண்மனை 2 படத்தில் அம்மன் பாட்டுக்கு மியூசிக் பண்ணுவோம் என்று நாங்கள் நம்பினோம் நீங்கள் எப்படி அண்ணா நம்புனீங்க?” என்று சுந்தர்சியிடம் ஹிப் ஹாப் ஆதி கேட்டார்.

அந்த கேள்விக்கு சிரித்துக்கொண்டே பதில் சொன்ன ஹிப்ஹாப் தமிழா ஆதி ” படத்தின் கதையை சொல்லிவிட்டு படத்தில் அம்மன் பாட்டு இருக்கு அதை எப்படி நீ போடுவ தம்பி என்று ஆதியிடம் கேட்டேன். முறைமானம் படத்தில் எனக்கு ரொம்பவே பிடித்த காட்சி ஒன்று இருக்கும். கவுண்டமணிக்கு பிரச்சனை வரும்போது ஜெயராம் பின்னாடி இருந்துகொண்டு அண்ணே நான் பாத்துக்கொள்கிறேன்.. அண்ணே நான் பாத்துக்கொள்கிறேன்  என்று கூறுவார். அதைப்போல தான் தம்பி ஆதியும் அண்ணே நான் பாட்டு போட்டுவிடுகிறேன் அன்னே என்று கூறினார். நானும் நம்பி கொடுத்தேன் பாடலை அருமையாக கொடுத்தார்” என்றும் சுந்தர் சி தெரிவித்துள்ளார்.  அரண்மனை 2 படத்தில் இடம்பெற்ற அந்த அம்மன் பாடல் பெரிய அளவில் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்