ஆஸ்கர் விருது விழாவில் தமிழில் பேசியது ஏன்? மனம் திறந்த ஏ.ஆர்.ரஹ்மான்.!
95-வது ஆஸ்கர் விருது (அகாடமி விருதுகள்) வழங்கும் விழா மார்ச் 12-ம் தேதி (இந்தியாவில் மார்ச் 13) லாஸ் ஏஞ்சல்ஸ் டோலி தியேட்டரில் மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த விழா பிரமாண்டமாக இருக்கவேண்டும் என்பதற்க்காக அதற்கான முன் ஏற்பாடுகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் கடந்த 81-வது ஆஸ்கர் விழாவில் விருது விழாவில் “ஸ்லம்டாக் மில்லியனர்’ என்ற ஆங்கில படத்திற்காக சிறந்த பாடல் மற்றும் சிறந்த பின்னணி இசை ஆகிய பிரிவில் விருது பெற்றிருந்தார். இதன் மூலம், ஆஸ்கர் விருது வாங்கிய முதல் தமிழர் என்ற பெருமையையும் அவர் பெற்றார். விழாவில் ‘எல்லா புகழும் இறைவனுக்கே’ என தமிழில் தெரிவித்திருந்தார்.
A.R. Rahman (@arrahman) reflects on winning the Oscar for Best Original Song and Score for ‘Slumdog Millionaire’ at the 81st #Oscars. pic.twitter.com/Hry5GmTBzK
— The Academy (@TheAcademy) March 2, 2023
இந்த நிலையில், விருது விழாவில் தமிழில் பேசிய காரணம் குறித்து மனம் திறந்து பேசிய வீடியோவை தற்போது ஆஸ்கர் அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த படத்திற்கு முதலில் பின்னணி இசை விருதுக்காக என்னுடைய பெயரை அறிவித்தபோது, இது உண்மையா..? கனவா …? என நினைத்து கொண்டிருந்தேன். பிறகு மேடைக்கு சென்று இயல்பாக பேசினேன்.
நான் கீழே அமர்ந்திருக்கும் போது ஆஸ்கர் விருதுபெற்ற நடிகை ஒருவர் மேடையில் ஸ்பானிஷ் மொழியை பேசிக்கொண்டிருந்தார். அவருடைய மொழி அவர் பேசினார். எனவே, நானும் மேடையில் தமிழில் பேசினேன். ஒரு சந்தோஷமான சூழ்நிலையில், நீங்கள் கடவுளை நினைத்தால், கண்டிப்பாக ஒரு துக்க சூழ்நிலையிலும் நீங்கள் நினைக்க வேண்டும். நான் அப்போது சந்தோஷ தருணத்தில் இருந்தேன். அதனால் கடவுளை நினைத்து கொண்டேன் ” என கூறியுள்ளார்.