விழாவிற்கு வருகை தரும் அஜித்? சென்னை வந்தது ஏன்? திரைத்துறை சங்கங்களின் நகர்வு…

ajith

இயக்குனர் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் “விடாமுயற்சி” திரைப்படத்தின் படப்பிடிப்பில் ஈடுபட்டு வரும் அஜித் குமார், முதல் ஷெட்யூலை முடித்துவிட்டு நேற்றைய தினம் அஜர்பைஜானில் இருந்து சென்னை திரும்பினார்.

ஒரு வாரகால ஓய்வுக்கு பிறகு, அடுத்தகட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு துபாய் செல்ல உள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் முழு படப்பிடிப்பும் அடுத்த ஆண்டு ஜனவரிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், திரைத்துறை சார்பில் முன்னெடுக்கப்படும் கலைஞர் நூற்றாண்டு விழாவுக்கு நடிகர் அஜித் கந்தப்பன் முறையில் வர வேண்டும் என்ற கோரிக்கையை வைத்து முக்கிய பிரபலம் ஒருவர் எதிர்பார்ப்பதாகக ஒரு தகவல் பரவி வருகிறது.

மற்றொரு தவலின்படி, நடிகர் அஜித் சென்னை வந்துள்ள நிலையில், ரஜினி- கமலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது போல், திரைத்துறை சங்கங்கள் நேரில் சென்று அழைக்க உள்ளதாக சினிமா வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. ஒருவேளை இது நடந்தால் அது  தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரமாண்டமாக நடைபெறும் ‘கலைஞர் 100’ விழா! வருகை தருவாரா அஜித்குமார்?

ஆனால், பொதுவாகவே நடிகர் அஜித்குமார் தன்னுடைய படங்களுக்கு இசை வெளியீட்டு விழா நடத்துவது, வெற்றி விழா நடத்துவது என அதில் ஆர்வம் காட்டாத ஒருவர். தன்னுடைய படங்களுக்கு விழா நடந்தாலும் கூட அதில் கலந்துகொள்ளமாட்டார். தன்னுடைய படங்கள் மட்டுமின்றி விருது நிகழ்ச்சி, அரசியல் நிகழ்ச்சி என எதிலும் கலந்துகொள்ளமாட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

கலைஞர் நூற்றாண்டு விழா

சென்னையில் அடுத்த மாதம் பிரமாண்டமாக திமுகவினர் மற்றும் தமிழக அரசு மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் நூற்றாண்டு ஆண்டு விழாவை திரைத்துறை சார்பில் நடந்துகிறாரகள். அந்த விழாவில் கலந்துகொள்ள இந்திய சினிமாவின் முக்கிய பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஜினிகாந்த் மற்றும் கமல் ஆகியோர் கலந்து கொள்ளவது உறுதியாகி இருக்கிறது.

விஜய் அஜித்தை அழைத்துள்ளளோம்…யாரையும் வற்புறுத்தவில்லை – தயாரிப்பாளர் சங்கம்.!

சென்னை வந்த அஜித்

இதற்கிடையில், நடிகர் அஜித் சென்னை வந்ததற்கு ஒரு காரணமகாக, விடாமுயற்சி படப்பிடிப்பின்போது, கலை இயக்குனர் மிலன் மாரடைப்பால் காலமானார். ஆனால், படப்பிடிப்பு தொடர்ச்சியாக நடைபெற்றதால், அவரது இறுதிச் சடங்கில் கூட, நடிகர் அஜித் மற்றும் படக்குழுவினரால் கலந்துக்கொள்ள முடியவில்லை.

முடிந்தது ‘விடாமுயற்சி’ ஷூட்டிங்? திடீரென சென்னை திரும்பிய அஜித் குமார்! ஏன் தெரியுமா?

இந்நிலையில், சென்னை திரும்பியவுடன் மிலன் வீட்டிற்கு நேரில் சென்று அவரது புகைப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய அஜித், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்