குக் வித் கோமாளியிலிருந்து வெளியேறியதற்கு காரணம் யார்..? மனம் திறந்த ஆண்ட்ரியன்.!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், யார் யாரெல்லாம் இறுதிப் போட்டிக்கு செல்ல போகிறார்கள், யார் இறுதி போட்டியில் டைட்டிலை வெல்ல போகிறார் என்பது குறித்த எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு இருக்கிறது.

_andreanne__]
இதற்கிடையில், இந்த நிகழ்ச்சியில் இருந்து கடந்த வாரம் ஆண்ட்ரியன் வெளியேறினார். நன்றாக சமையல் செய்து இதற்கு முன்னதாக நடுவர்களிடம் பாராட்டுகளை பெற்ற ஆண்ட்ரியன் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறியது ரசிகர்களுக்கு மிகவும் சோகத்தையும், அதிர்ச்சியும் கொடுத்தது.

_andreanne__]
ஆண்ட்ரியன் எலிமினேட் ஆன கோபத்தில் ரசிகர்கள் பலரும் இதற்கு காரணம் விஜய் டிவி தான் என கூறி வந்தனர். இதனையடுத்து, ஆண்ட்ரியன் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ” என்னுடையநீக்கத்திற்கு என்னைத் தவிர வேறு யாரும் பொறுப்பல்ல. எனது சக போட்டியாளர்கள் அனைவரும் நம்பமுடியாத திறமை வாய்ந்தவர்கள் மற்றும் போட்டியில் தங்களின் இடத்திற்கு தகுதியானவர்கள்.

நான் சில கடினமான காலங்களைச் சந்தித்து வருகிறேன், போட்டியில் நான் செய்ததைப் போல கவனம் செலுத்த முடியவில்லை. நிகழ்ச்சியின் ஒவ்வொரு தருணத்தையும் நான் உண்மையிலேயே நேசித்தேன், நீங்கள் அனைவரும் எனக்குக் கொடுத்த அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி.

_andreanne__]
இவ்வளவு நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை. அனைத்திற்கும் உண்மையிலேயே நன்றியுள்ளவனாக இப்போது நான் முன்பை விட வலுவாக திரும்பி வந்து விளையாட்டிற்கு திரும்ப என்னால் முடிந்த அனைத்தையும் செய்ய முடியும். அன்பும் நட்பும் நிறைந்தது, கருத்து தெரிவிக்கும் போதும், பார்க்கும் போதும் மறக்க வேண்டாம்” என கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
‘குட் பேட் அக்லி’ திரைப்படத்திற்காக வைக்கப்பட்ட 200 அடி உயர கட்-அவுட் சரிந்து விழுந்ததால் பரபரப்பு.!
April 7, 2025
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025