Kiran Rathode iv [file image]
Kiran Rathode : பிரபல கிளாமர் நடிகையான கிரண் ரதோட் தற்போது தனியார் யூடுப் சேனலில் ஒரு நேர்காணலில் அவர் மனம் திறந்து சில விஷயங்களை கூறி இருந்தார்.
தமிழ் சினிமாவில் 2001-ம் ஆண்டு இயக்குனர் சரண் இயக்கி, சியான் விக்ரம் நடைப்பில் வெளியான ஜெமினி படத்தின் மூலம் இவர் அறிமுகமானார். இவர் அறிமுகமான முதல் படத்திலேயே இவருக்கென ரசிகர்கள் உருவாகினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து வில்லன், அன்பே சிவம், வின்னர், தென்னவன் போன்ற வெற்றி படங்களில் நடித்து மேலும் பிரபலம் ஆனார். அதை தொடர்ந்து சில தமிழ், தெலுங்கு படங்களுக்கு ஐடம் பாடல்களுக்கும் நடனமாடி இருக்கிறார்.
ஆனால், அதன் பிறகு சில வருடங்களில் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியவுடன் அவ்வப்போது ஏதாவது ஒரு படத்தில் நடித்து கொண்டிருந்தார். தற்போது, இவர் மேல் பலவித ஆபாசமான குற்றச்சாட்டுகள் நிலவி வந்தது என்பது எல்லாருக்கும் தெரிந்ததே. இந்நிலையில், இவர் சில நாட்களுக்கு முன்பு தனியார் யூடுப் சேனலில் பேட்டி அளித்திருந்தார். அந்த பேட்டியில் இவர் சில விஷயங்களை மனம் திறந்து பேசி இருந்தார்.
அந்த பேட்டியில், உங்களை ஒரு பிரபலம் காதலிச்சு ஏமாத்திட்டாரமே என்று கேள்வி எழுப்பிய போது, ” ஆமாம், நான் அவரது பேரை சொல்ல முடியாது. அவர் என்னை ஏமாற்றி விட்டார் என முழுமையாக சொல்ல முடியாது. ஆனால், காதலிச்சு ஏமாற்றி இருக்கிறார் என்பது உண்மை தான். மேலும், என்னை ரசிகர்கள், பிரபலங்கள் என அதிக நபர்கள் காதிலித்ததும் உண்டு
ஆனால், அவர்களை எல்லாம் தாண்டி அந்த ஒரு நடிகரிடம் நான் மிகவும் நெருக்கமாக பழகினேன், அவர் என்னை ஏமாற்றி விட்டார் “, என தனியார் யூடுப் சேனலில் ஒரு நேர்காணலில் எழுப்பிய அந்த கேள்விக்கு சிரித்து கொண்டே கிரண் பதிலளித்தார். இதை கண்ட சினிமா ரசிகர்கள் யார் அந்த பிரபலம் ஆக இருக்கும் என அவர்களது கருத்தை சமூக வளைதளத்தில் பேசி வருகிறார்கள்.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
வாஷிங்டன் : டொனால்ட் டிரம்ப் அமெரிங்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு பல்வேறு அதிரடி முடிவுகளை, முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மற்ற…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…
சென்னை : கோடைகாலம் ஆரம்பித்து தமிழகத்தில் அடுத்தடுத்த நாட்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகரிக்க கூடும் என்று கூறப்பட்டுள்ள நிலையில்,…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. ரோஹித்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது கட்டம் நாளை (மார்ச் 10) முதல் தொடங்கி ஏப்ரல் 4ஆம் தேதி…