பூனம் பாண்டே மரணத்தில் மர்மம்! உதவியாளர் சொன்ன விஷயம்?
மாடல் அழகியும், பாலிவுட் நடிகையுமான பூனம் பாண்டே (32) கர்ப்பப்பை புற்றுநோய் காரணமாக உயிரிழந்த செய்தி பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.நேற்று அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இதுகுறித்து அவரது மேலாளர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்.
இருப்பினும் பூனம் பாண்டே உயிரிழந்ததாக மட்டுமே தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் அவருடைய இறுதிச்சடங்கு மற்றும் அவருடைய குடும்பம் இதனை பற்றி எந்த தகவலுமே தெரிவிக்கவில்லை என்ற காரணத்தால் உண்மையில் பூனம் பாண்டேவின் இறப்பு செய்தி மர்மமாக இருக்கிறது.
இதனையடுத்து, பூனம் பாண்டே உயிரிழந்த செய்தியை தன்னால் நம்பவே முடியவில்லை என்றும், இதில் எதோ மர்மம் இருக்கிறது எனவும் உதவியாளரும் தனிப்பட்ட பாதுகாவலருமான அமின் கான் என்பவர் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார்.
நடிகை பூனம் பாண்டே கர்ப்பப்பை புற்றுநோயால் காலமானார்.!
இது தொடர்பாக பேசிய அவர் “பூனம் பாண்டே இறந்துவிட்டார் என்பதனை என்னால் இன்னும் வரை நம்பவே முடியவில்லை. இந்த அதிர்ச்சியான செய்தியை நான் கேட்டவுடன் உடனடியாக அவருடைய தங்கைக்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்தேன். ஆனால், என்னால் தொடர்பு கொள்ள முடியவில்லை. கடைசியாக ஒரு 2 நாட்களுக்கு முன்பு அதாவது ஜனவரி 31-ம் தேதி மும்பையில் உள்ள போனிக்ஸ் மாலில் போட்டோ ஷூட்டிற்கு அவருடன் நான் சென்று இருந்தேன்.
அப்போது கூட அவர் மிகவும் நன்றாகத்தான் இருந்தார். அவரை பார்க்கும்போது அவருக்கு எந்த வித பிரச்சனைகளும் இருந்ததாக சத்தியமாக தெரியவில்லை. ஒரு முறை கூட அவர் என்னிடமும் இந்த மாதிரி எனக்கு உடலில் பிரச்சனை இருக்கிறது என்று கூறியதே இல்லை. எனவே, 2 நாட்களுக்கு முன்பு நன்றாக இருந்த அவர் இறந்துவிட்டதாக வெளியான செய்தியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உண்மை என்று அவருடைய சகோதிரியிடம் இருந்து கேட்ட காத்திருக்கிறேன்” எனவும் அமின் கான் கூறியுள்ளார்.