உங்க பின்னாடி யாரு இருக்கா? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பாலா!

Published by
பால முருகன்

சின்னத்திரை நடிகர் பாலா தான் சம்பாதித்த பணங்களை வைத்து கஷ்டப்படும் மக்களுக்கு தன்னால் முயன்ற உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக கடந்த ஆண்டு இறுதியில் வெள்ளத்தால் சென்னை மக்கள் தத்தளித்த போது தன்னால் முடிந்த சில குடும்பங்களுக்கு 1,000 ரூபாய் பணம் கொடுத்து உதவி செய்தார். அதனை போலவே, அம்புலன்ஸ் இல்லாத கிராமங்களுக்கும் அம்புலன்ஸ் வாங்கி கொடுத்து வருகிறார்.

அந்த வகையில், நேற்று திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியை அடுத்த நெக்னாமலை கிராமத்திற்கு இலவச ஆம்புலன்ஸ் வழங்கினார். ஒரு பக்கம் மக்கள் பலரும் பாலாவை பாராட்டினாலும் மற்றோரு பக்கம் சிலர் பாலா பின்னாடி யாரோ இருக்காங்க அவருக்கு நிறைய காசு வருகிறது என்பது போல விமர்சித்தனர்.

மணிகண்டனுக்கு அடுத்த ஹிட் ரெடி! ‘லவ்வர்’ படத்தின் முதல் விமர்சனம்! 

இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய பாலா ” நான் எந்த நோக்கத்துக்காகவும் இப்படி உதவி செய்யவில்லை. இந்த ஊரில் அம்புலன்ஸ்  வசதி இல்லை என்பது எனக்கு முதலில் தெரிய வந்தது. பிறகு எப்படியாவது அம்புலன்ஸ்  வாங்கிக்கொடுக்கவேண்டும் என்று நினைத்தேன்.

பணம் சேர்ந்த பிறகு வாங்கிக்கொடுத்துவிட்டேன். இது நான் ஐந்தாவதாக வாங்கி கொடுத்த அம்புலன்ஸ். அடுத்ததாக கண்டிப்பாக ஆறாவது அம்புலன்ஸ் வாங்கிக்கொடுப்பேன். என்னுடைய பின்னால் யாரோ இருக்கிறார்கள் என்று பலரும் கூறுகிறார்கள். இப்போது சொல்கிறேன் என் பின்னாடி நான் பட்ட கஷ்ட்டங்களும், அவமானங்களுக்கு தான் இருக்கிறது.

நடிகை அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்?

அது எல்லாம் இருந்தது என்ற காரணத்தால் தான் நான் இந்த இடத்திற்கு வந்துள்ளேன். பேசுபவர்கள் பேசுகிட்டே தான் இருப்பார்கள். என்னை பற்றி தவறாக தகவல்களை பரப்ப காசு வாங்கிவிட்டு சிலர் செயல்படுகிறார்கள் அவர்களிடம் நான் சொல்ல விரும்புவது அந்த பணத்தை என்கிட்ட கொடுத்தாலே நானே என்னை பற்றி தவறாக போடுவேன்.

அதற்காக நீங்கள் கொடுக்கும் பணத்தை நான் பசங்களுக்கு கல்லூரி கட்டணம் செலுத்த கொடுப்பேன். அப்படி தவறாக என்னை பற்றி பேசுபவர்களுக்கு நான் பதில் சொல்வதற்கு முன்பே மக்கள் அவர்களுக்கு பதில் அளித்து விடுகிறார்கள். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை சொல்லி கொள்கிறேன்” எனவும் நடிகர் பாலா தெரிவித்துள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

12 hours ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

13 hours ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

13 hours ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

14 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

14 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

15 hours ago