சென்னை : நடிகர் அஜித்குமார் சம்பளத்தை அதிகமாக கேட்ட நிலையில், சன்பிக்சர்ஸ் நிறுவனம் 2 கண்டிஷன் போட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நடிகர் அஜித்குமார் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகி வரும் “விடாமுயற்சி” படத்தையும், ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் “குட் பேட் அக்லி” ஆகிய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். இந்த இரண்டு படங்களுக்கான வேலைகளும் மிகவும் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது.
இந்த படங்களை தொடர்ந்து நடிகர் அஜித்குமார் வீரம், விவேகம், விஸ்வாசம், வேதாளம் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் சிறுத்தை இயக்கத்தில் நடிக்கவுள்ளதாகவும், நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சிறுத்தை சிவா அஜித் அந்த படத்தின் மூலம் இணையாகவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது.
இவர்கள் இருவரும் இணையும் இந்த திரைப்படத்தினை பிரபல தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாகவும் கடந்த ஆண்டில் இருந்தே தகவல்கள் பரவி வருகிறது. இந்த சூழலில், இந்த திரைப்படத்தில் இருந்து சன்பிக்சர்ஸ் நிறுவனம் பின் வாங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏனென்றால், அஜித் முதலில் சம்பளத்தை உயர்த்தி தனக்கு இவ்வளவு சம்பளம் வேண்டும் என்று கேட்டாராம்.
அஜித் கேட்ட அந்த சம்பளம் ரொம்பவே பெரிய தொகையாக இருந்த காரணத்தால் இவ்வளவு கோடி சம்பளம் கொடுக்க முடியாது என்று சன்பிக்சர்ஸ் நிறுவனம் கூறிவிட்டு அவர்கள் ஒரு தொகையை பேசி இத்தனை கோடி தான் கொடுப்போம் என்று முதல் கண்டிஷன் போட்டார்களாம். அதைப்போல மற்றோரு கண்டிஷனும் அஜித்துக்கு சன்பிக்சர்ஸ் நிறுவனம் போட்டதாம்.
படத்தை நடித்து முடித்துக்கொடுத்த பின் 2 மணி நேரம் ப்ரோமோஷனுக்காக நேர்காணலில் பேசி கொடுக்கவேண்டும். இந்த இரண்டு கண்டிஷன்களுக்கு சம்மதம் தெரிவதால் படம் செய்யலாம் என்று அஜித்திற்கு சன்பிக்சர்ஸ் நிறுவனம் கண்டிஷன் போட்டுள்ளதாம். அஜித் சும்மாவே ப்ரோமோஷன் என்றால் ஆர்வம் காட்டமாட்டார் எனவே இந்த கண்டிஷனுக்கு அவர் ஒப்புக்கொள்வது சந்தேகம் என்பதால் சன்பிக்சர்ஸ் நிறுவனம் படத்தில் இருந்து விலக வாய்ப்பு இருக்கிறதாம். இந்த தகவலை பிரபல யூடியூப் சேனலான வலைப்பேச்சு தெரிவித்துள்ளது.
மும்பை : இன்று மும்பை கடற்கரை பகுதியில் பயணிகளை ஏற்றிச்செல்லும் சுற்றுலா படகு ஒன்று அருகில் உள்ள யானை தீவுகளுக்கு…
சென்னை : கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ போன்ற மெகா ஹிட் படங்களை இயக்கி வெற்றிப்பட இயக்குனராக வலம் வரும்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் நேற்று பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தற்போது அம்பேத்கர் அம்பேத்கர் என பேசுவது…
ஐதராபாத்: ஐதராபாத்தில் புஷ்பா 2 படத்தின் சிறப்பு காட்சியின்போது, நெரிசலில் சிக்கி காயமடைந்த சிறுவனின் உடல்நிலை மோசம் அடைந்து வந்ததாக…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…