Indian 2 audio launch [File Image]
சென்னை: இந்தியன் 2 படத்தின் பிரம்மாண்டமான இசை வெளியீட்டு ஜூன் 1, 2024 (சனிக்கிழமை) அன்று நடைபெற இருக்கிறது.
நடிகர் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘இந்தியன் 2’ திரைப்படம் ஜூலை 12 ஆம் தேதி இந்திய அளவில் பிரமாண்டமாக வெளியிடப்பட உள்ளது. இயக்குனர் ஷங்கர் இயக்கும் படத்தில் கமல்ஹாசனை தவிர, சித்தார்த், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், எஸ்.ஜே.சூர்யா, பாபி சிம்ஹா, விவேக், பிரியா பவானி ஷங்கர், பிரம்மானந்தம், சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
படத்திற்கு அனிருத் இசையமைக்க, லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. விரைவில் படத்திற்கான ப்ரோமஷன் பணி தொடங்கவிருக்கிறது. அதன் ஒரு பகுதியாக, சமீபத்தில் வெளியான இப்படத்தின் முதல் பாடலான ‘பாரா’ பாடல் ரசிகர்களிடையே கலவையான வரவேற்பை பெற்றுள்ளது.
இதனிடையே, இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா, வரும் ஜூன் 1ஆம் தேதி நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த தகவலின்படி, ஒரு பக்கம் இசை வெளியீட்டு விழாவிற்கான ஏற்பாடுகள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது.
இதில் சிறப்பு விருந்தினர்களாக, ரஜினிகாந்த் , சிரஞ்சீவி , மணிரத்னம் , ராம் சரண், ரன்வீர் சிங் மற்றும் மோகன்லால் ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொள்ள வாய்ப்புள்ளது. ஆனால், இது குறித்து தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்புக்கு நாம் காத்திருக்க வேண்டும்.
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…