எங்க போனாலும் அது இருக்கனும்! சூரி போடும் முக்கிய கண்டிஷன்? 

soori

சூரி : படப்பிடிப்புக்காக நடிகர் சூரி எங்கு சென்றாலும்  தனக்கு சாப்பிட கஞ்சு வேண்டும் என்று கண்டிஷன் போடுவதாக அவரே பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

காமெடியான கலக்கி கொண்டு இருந்த நடிகர் சூரி தற்போது ஹீரோவாக ஜொலித்து கொண்டு இருக்கிறார் என்றே சொல்லவேண்டும். கடைசியாக விடுதலை படத்தில் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்து இருந்த நிலையில், அடுத்ததாக கருடன் படத்தில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை இயக்குனர் துரைசெந்தில் குமார் இயக்கியுள்ளார்.

இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வரும் மே 31-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டும் இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகளும் மும்மரமாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் சூரி யூடியூப் சேனல்களுக்கு பேட்டியும் கொடுத்து வருகிறார்.

அப்படி தான் சமீபத்தில், ஒரு யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த  பேட்டியில் படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பு தான் போடும் முக்கிய கண்டிஷன் பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய சூரி ” எனக்கு சாப்பிடுவதற்கு கஞ்சி இருந்தால் ரொம்பவே பிடிக்கும். நான் ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகி படப்பிடிப்புக்கு செல்வதற்கு முந்தைய தினமே கஞ்சி அங்கு எங்கயாவது இருக்கிறதா என்று என்னுடைய பசங்களை விட்டு விசாரிப்பேன்.

அப்படி கடைகளில் இல்லை என்றால் அந்த பகுதியில் இருக்கும் வீடுகளில் சூரி அண்ணனுக்காக கஞ்சு ரெடி செய்து வைக்க சொல்லுங்கள் என்று என்னுடைய பசங்களிடம் கூறுவேன். என்னுடைய பசங்களும் அங்கு இருக்கும் மக்களிடம் சொல்லிவிடுவார்கள். நான் கேட்டதும் அவர்கள் தங்களுடைய மகனை போல பணம் கூட வாங்காமல் எனக்காக கஞ்சு செய்து கொடுப்பார்கள். எனக்கு அது ரொம்பவே  பிடிக்கும்.

எங்கு போனாலும் சரி எனக்கு கஞ்சி இருந்தே ஆகவேண்டும். ஒரு முறை நான் அஜித் சாருடன் ‘வேதாளம்’ படத்தில் நடித்து கொண்டு இருந்த சமயத்தில் படத்தின் படப்பிடிப்புக்கு கொல்கத்தாவிற்கு சென்றேன். அங்கு செல்லும்போதே நான் சொல்லிவிட்டேன் எனக்கு கண்டிப்பாக பழைய கஞ்சி இருக்கவேண்டும் என்று கண்டிஷன் போட்டுவிட்டேன். அங்கேயும் தமிழர்கள் இருந்தார்கள் அவர்கள் மூலம் எனக்கு சாப்பிட கஞ்சி கிடைத்தது” என்றும் சூரி கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்