தோட்டா காயங்களுடன் தப்பி சென்ற ‘புஷ்பா’.! படக்குழு வெளியிட்ட அதிரடி வீடியோ.!
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் நடிகர் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா ஆகியோர் நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய வெற்றியடைந்தது. முதல் பாகம் மிகப்பெரிய ஹிட் ஆன நிலையில், தற்போது இரண்டாவது பாகம் விறு விறுப்பாக தயாராகி வருகிறது.
முதல் பாகத்தை விட புஷ்பா படத்தின் இரண்டாவது பாகத்தை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக களமிறங்கி வேலை செய்து வருகிறார்கள். எனவே படத்தின் ஒவ்வொரு காட்சிகளையும் அருமையாக எடுத்து வருகிறார்கள்.
இதற்கிடையில், நேற்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் புஷ்பா 2 படத்தின் புதிய அப்டேட் ஒன்று இன்று காலை 11.7மணிக்கு வெளியாகும் என அறிவித்திருந்தது. அதன்படி தற்போது அந்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி 4.5 மணிக்கு வெளியாகும் என அறிவித்துள்ளனர்.
#WhereIsPushpa ? (Tamil)
The search ends soon!The HUNT before the RULE ????
Reveal on April 7th at 4.05 PM ????#PushpaTheRule ❤️???? pic.twitter.com/t7GzeoTsyY— Mythri Movie Makers (@MythriOfficial) April 5, 2023
மேலும் புஷ்பா முதல் பாகத்தில் அல்லு அர்ஜுனை கைது செய்வது போல காட்டி இருப்பார்கள். அதனை தொடர்ந்து தற்போது வெளியிட்டுள்ள ப்ரோமோவில் சிறையில் தோட்டா காயங்களுடன் தப்பி செல்வது போல் கட்டப்பட்டுள்ளது. எனவே வரும் 7-ஆம் தேதி வெளியாகும் கிலிம்ப்ஸ் வீடியோவால் புஷ்பா எங்கு இருக்கிறார் என்பது கட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Team #PushpaTheRule wishes the gorgeous ‘Srivalli’ aka @iamRashmika a very Happy Birthday ❤️
May you continue to RULE our hearts ❤️????
Icon Star @alluarjun @aryasukku #FahadhFaasil @ThisIsDSP @SukumarWritings @PushpaMovie pic.twitter.com/wNbsDxOUys
— Mythri Movie Makers (@MythriOfficial) April 5, 2023
இதற்கிடையில், படத்தின் கதாநாயகி ராஷ்மிகா இன்று தனது 27-வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.