அடுத்த ஆஸ்கர் விருது வழங்கும் விழா எங்கு? எப்போது? வெளியானது அறிவிப்பு.!
98வது ஆஸ்கர் விருது விழா அடுத்தாண்டு மார்ச் 15ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கான பரிந்துரைகள் ஜன.22ம் தேதி வெளியாகும்.

லாஸ் ஏஞ்சலஸ் : திரைப்படத் துறையில் மதிப்புமிக்கதாகக் கருதப்படும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழா உலகளவில் திரைத்துறையில் சிறந்து விளங்கும் படைப்புகளையும் கலைஞர்களையும் கௌரவிக்கும் மிக முக்கியமான நிகழ்வாகும். தற்போது, 2026 ஆஸ்கார் விருதுகளுக்கான தேதிகளை அகாடமி அறிவித்துள்ளது.
ஆம், 98-வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்தாண்டு மார்ச் 15-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. விருதுக்கான பரிந்துரைகள் ஜன.22ம் தேதி வெளியாகும். 2025 ஜனவரி முதல் டிசம்பர் வரை வெளியான படங்கள் ஆஸ்கார் விருதுக்கு தகுதி பெறும்.
இந்த முறை ஆஸ்கர் விருதுக்கு புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி பரிந்துரைக்கப்படும் அனைத்து திரைப்படங்களையும் அகாடமி உறுப்பினர்கள் பார்த்து, இறுதி ஓட்டெடுப்புக்கு தேர்வு செய்ய வேண்டும். மேலும், இந்த முறை AI பயன்படுத்தும் படங்களும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
படங்கள் மற்றும் கலைஞர்கள் ஆஸ்கர் விருதுக்கு தங்களை பரிந்துரைப்பதற்கான மனுக்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி டிசம்பர் 2025 இல் அறிவிக்கப்படும். இந்த விழா 98வது 2026 ஆம் ஆண்டு மார்ச் 15, ஞாயிற்றுக்கிழமை அன்று அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் டால்பி திரையரங்கில் நடைபெறும்.
Mark your calendars! The 98th #Oscars will take place on Sunday, March 15, 2026.
Nominations will be announced on Thursday, January 22, 2026. pic.twitter.com/vhoYGGh5Pz
— The Academy (@TheAcademy) April 21, 2025