இந்து – கிறிஸ்துவ முறைப்படி கீர்த்தியின் திருமணம்! எங்கு? எப்போது?
நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது காதலர் ஆண்டனி தட்டில் ஆகியோரது திருமணம் இம்மாதம் டிசம்பர் 11 மற்றும் 12ல் நடைபெற உள்ளதாகத் கூறப்படுகிறது.
சென்னை : நடிகை கீர்த்தி சுரேஷின் காதல் கதை என சினித்துறையில் பல வதந்திகள் உண்டு. ஆனால், கீர்த்தி அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளாமல் தனது வேலையில் மட்டும் கவனம் செலுத்தி இன்று பாலிவுட் வரை சென்றுவிட்டார்.
சமீப நாட்களாக கீர்த்தி சுரேஷின் திருமண வதந்திகள் பரவி வந்த நிலையில், தொழிலதிபர் ஆண்டனி உடனான தனது 15 ஆண்டுகால காதல் கதையை அண்மையில் வெளிப்படுத்தினார். இதனையடுத்து, கீர்த்தி சுரேஷ் ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமியை தரிசனம் செய்வதற்காக சமீபத்தில் திருப்பதி சென்றார்.
அப்பொழுது, தரிசனம் முடிந்து திரும்பிய நடிகை கீர்த்தி சுரேஷ் தனது திருமணம் குறித்து வெளிப்படையாக பேசினார். தனது திருமணம் மற்றும் பாலிவுட் அறிமுகத்திற்கான ஆசிர்வாதம் பெற கோயில் வந்ததாக கூறினார்.
அதன்படி, நடிகை கீர்த்தி சுரேஷ் அவரது காதலர் ஆண்டனி தட்டில் ஆகியோரது திருமணம் இம்மாதம் டிசம்பர் 11 மற்றும் 12ல் நடைபெற உள்ளதாகத் கூறப்படுகிறது. ஆனால் இந்த தேதிகள் இன்னும் அதிகாரப்பூர்வமாக இறுதி செய்யப்படவில்லை.
இதனிடையே, கீர்த்தி இந்து மதத்தைச் சேர்ந்தவர், ஆண்டனி கிறிஸ்துவ மதத்தைச் சேர்ந்தவர். அதனால், அவர்களது திருமணம் இந்து மற்றும் கிறிஸ்துவ முறைப்படி நடக்க உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. கோவாவில் ‘டெஸ்டினேஷன் வெட்டிங்’ ஆக மூன்று நாட்கள் நடைபெற உள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.