‘கேம் சேஞ்சர்’ படத்தின் டிரெய்லர் எப்போது? அதிகாரப்பூர்வ ரிலீஸ் தேதி அறிவிப்பு!
நடிகர் ராம் சரண் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான 'கேம் சேஞ்சர்' படத்தின் டிரெய்லர் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது.
சென்னை: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் நாயகன் ராம்சரண், கியாரா அத்வானி உள்ளிட்டோர் நடித்துள்ள ‘கேம் சேஞ்சர்’ படத்தின் ட்ரெய்லர், நாளை மாலை 5.04க்கு வெளியாகிறது. இந்த அறிவிப்புடன், ராம் சரண் இடம்பெறும் புதிய போஸ்டரையும் தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். இது ஒரு அரசியல் கலந்த ஆக்சன் திரில்லர் திரைப்படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.
சில மாதங்களுக்கு முன்பு படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டனர். சமீபத்தில் தயாரிப்பாளர்கள் படத்தின் நான்காவது சிங்கிள் பாடலை ‘டாப்’ என்ற பெயரில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், இப்படத்தின் படம் வெளியாக இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ட்ரைலர் நாளை வெளியாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது நடிகர் ராம்சரண் ரசிகர்களுக்கு புத்தாண்டு விருந்தாக அமைந்திருக்கிறது.
A blockbuster start to the year already! #GameChangerTrailer drops on 2.01.2025!❤️🔥😎
Let The Games Begin 💥❤️🔥#GameChanger #GameChangerOnJanuary10 pic.twitter.com/jvJeemY9Dd
— Game Changer (@GameChangerOffl) January 1, 2025
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் பேனரில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரித்துள்ள இப்படத்திற்கு எஸ் தமன் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அஞ்சலி, சமுத்திரக்கனி, சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்தின் திரைக்கதையை கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். படம் ஜனவரி 10, 2025 அன்று திரைக்கு வருகிறது.