Kiran Rathod : ரஜினிகாந்த் படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்தபோது கிரண் நடிக்க முடியாது என மறுப்பு தெரிவித்துள்ளார்.
சினிமா துறையில் நடிகைகளுக்கு கிடைக்கும் வரவேற்பை பல நடிகைகள் தக்க வைத்து கொள்ளாமல் கடைசி நேரத்தில் வருத்தப்படுவது உண்டு. அப்படி தான் 90ஸ் கால கட்டத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்த கிரண். இவர் தொடர்ச்சியாக பிரசாந்த், விக்ரம், அஜித் உள்ளிட்ட பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்து முன்னணி நடிகையாக வளம் வந்தார்.
அதன்பிறகு சில காரணங்களால் படங்களில் நடிக்காமல் இருந்த நிலையில், அவருக்கு பட வாய்ப்புகளும் குறைந்தது என்றே சொல்லலாம். இவர் பீக்கில் இருந்த நேரத்திலே ரஜினி படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்ததாம். அது வேறு எந்த படமும் இல்லை ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பாபா படம் தான். இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க கிரணுக்கு வாய்ப்பு வந்ததாம்.
ஆனால், அந்த சமயம் நடிகை கிரண் விக்ரமுக்கு ஜோடியாக ஜெமினி படத்தில் நடிக்க கமிட் ஆகி படத்திற்கான அட்வான்ஸ் தொகையையும் வாங்கிவிட்டாராம். இதனால் ஜெமினி படத்தை விட்டுவிட்டு நடிகை கிரணால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம். விக்ரம் படத்தில் நடித்தாலும் ரஜினி பட வாய்ப்பு தவறிவிட்டது என்று அந்த சமயம் கிரண் வருத்தமும் பட்டாராம்.
மேலும், பட வாய்ப்புகள் இல்லாததால் கிரண் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார் இருந்தாலும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதைப்போல கவர்ச்சியான புகைப்படங்களையும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் வெளியீட்டு இருக்கிறார் அப்படி இருந்தும் பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இதனால் சமீபத்திய பேட்டி ஒன்றில் கூட தான் படத்தில் நடிக்க ஆவலுடன் காத்திருப்பதாகவும், பட வாய்ப்புகளே வரவில்லை எனவும் பேசி இருந்தார்.
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…
குஜராத்: இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள்…
சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான, 'விடுதலை' முதல் பாகம்…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக அமைச்சர்கள்,…