“நேத்து நைட் மாத்திரை கொடுக்க போகும்போது”…. டெல்லி கணேஷ் மகன் உருக்கம்!

delhi ganesh Mahadevan Ganesh

சென்னை : நடிகர் டெல்லி கணேஷின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,சமூக வலைதளைத்தில் திரைத்துறை சேர்ந்தவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும், இவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக அவரது வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று இரவு அப்பா நன்றாகத் தான் இருந்தார் திடீரென எதிர்பார்த்த விதமாக இறந்தார் என அவருடைய மகன் மகாதேவன் கணேஷ் செய்தியாளர்களுக்குக் கண்ணீருடன் பேட்டியளித்துள்ளார். இது குறித்து அவர் பேசியதாவது ” அப்பா வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார். நேற்று இரவு கூட என்னிடம் நன்றாகப் பேசினார். என்னுடைய அக்கா வீட்டிற்கு வந்திருந்தார்.

அவரிடமும் நன்றாகப் பேசிவிட்டுத் தூங்கப்போகிறேன் எனக் கூறிவிட்டு உறங்கச் சென்றார். அப்போது இரவு 11 மணி அளவில் அவருக்குத் தேவையான மருந்து மாத்திரைகளைக் கொடுப்பதற்காக எழுப்பச் சென்றோம். அப்போது உடல் அசைவில்லாமல் இருந்தார். உடனடியாக நான் பதறி மருத்துவருக்குத் தகவல் கொடுத்தேன்.

மருத்துவர் நேரடியாக வந்து என்னுடைய தந்தை இறந்ததாகத் தெரிவித்தார். திடீரென இப்படி நடந்தது எங்களுக்குப் பேரதிர்ச்சி. இந்த சோகமான சம்பவத்திலிருந்து நாங்கள் மீள்வது ரொம்பவே கடினமான விஷயம் தான். அப்பாவின் இறுதிச்சடங்கு நாளை காலை 11 மணி அளவில் நடைபெறும். என்னுடைய உறவினர்கள் சிலர் வரவேண்டி இருக்கிறது.

அதைப்போலத் திரையுலகைச் சேர்ந்த பலர் வருகை தரவேண்டி இருக்கிறது ” எனவும், அவர்கள் அஞ்சலி செலுத்துவதற்காக டெல்லி கணேஷ் உடல் சென்னை ராயபுரத்தில் உள்ள அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டு இருப்பதாகவும் வேதனையுடன் அவருடைய மகன் மகாதேவன் கணேஷ் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MS Dhoni OUT
Chennai Super Kings vs Kolkata Knight Riders
mp kanimozhi
Chennai Super Kings vs Kolkata Knight Riders toss
BJP MLA Nainar Nagendran
amitshah about dmk