மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்திய போது கதறி அழுத பாரதி ராஜா
இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான பாரதி ராஜா அவர்கள் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி போது மகேந்திரனின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதார்.
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும் , நடிகராகவும் வலம் வந்தவர் நடிகர் மகேந்திரன். இவர் இயக்கத்தில் தமிழ் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
இவர் சமீப காலமாக சில படங்களில் ஒரு நடிகராகவும் நடித்து வந்தவர். “தெறி” , “பேட்ட” , “சீதக்காதி “ஆகிய படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
சமீபத்தில் இவருக்கு உடல் நிலை சரில்லாமல் மருத்துவமையில் அனுமதிக்கப் பட்டார்.இன்று காலை 4 மணிக்கு சிகிச்சை பலனின்றி இயற்கை எய்தினார். இவரது மரணம் திரையுலகமே சோகத்தில் மூழ்கியுள்ளது.
சென்னை பள்ளிக்கரணை வீட்டில் வைக்கப்பட்டுள்ள இயக்குநர் மகேந்திரன் உடலுக்கு தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனரான பாரதி ராஜா அவர்கள் மகேந்திரன் உடலுக்கு அஞ்சலி செலுத்தி போது மகேந்திரனின் பிரிவை தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு கதறி அழுதார். பாரதிராஜா அழுதது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.