பிரியாணி பக்கெட் எடுக்க வேண்டிய நேரம் வந்திடுச்சு.. சூப்பர் அப்டேட் கொடுத்த கார்த்தி.!

Kaithi 2 - KARTHI

கைது 2 : கார்த்தியின் கேரியரில் கைதி ஒரு முக்கிய படம். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படம் ஆக்‌ஷன் த்ரில்லர் கலந்து உருவாகியிருந்ததால் பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது. இப்படத்தில் ‘டில்லி’ கதாபாத்திரத்தில் நடித்ததற்காக கார்த்தி பெரும் புகழ் பெற்றார்.

மேலும் இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடியைத் தாண்டி வசூல் செய்து சாதனை படைத்தது. இந்த வெற்றி படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் உருவாகும் என இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஹீரோ கார்த்தியும் பல பேட்டிகளில் கூறி வருகிறார்கள். அந்த வகையில், இன்று இரத்த தானம் செய்த தனது ரசிகர்களை நேரில் அழைத்துப் பாராட்டு விழாவில், நடிகர் கார்த்தி ‘கைதி 2’குறித்த அப்டேட்டை பகிர்ந்து கொண்டார்.

நடிகர் கார்த்தி கடந்த மே 25-ம் தேதி தனது 47வது பிறந்தநாளை கொண்டாடினார். அன்றைய தினம் அவரது ரசிகர்கள் பல இடங்களில் ரத்த தானம் செய்தனர். இந்நிலையில், இன்று சென்னையில் தனது பிறந்தநாளில் ரத்த தானம் செய்த ரசிகர்களை நேரில் அழைத்துப் பாராட்டி, விருந்தளித்தார்.

அப்பொழுது, அந்த பாராட்டு விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, “2 படங்களை முடித்துள்ளோம், இரண்டுமே இந்த வருடம் ரிலீஸ் ஆகிவிடும், அடுத்ததாக சர்தார் 2 தயாராகி வருகிறது. அதன் பிறகு ‘கைதி 2’ வரிசையில் உள்ளது. அடுத்த வருடம் லோகேஷ் கனகராஜ் வரச் சொன்னார் திரும்பவும் பிரியாணி பக்கெட் எடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று கூறியதும் அரங்கமே கை தட்டி உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்