வாரிசு திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், விஜய் அடுத்ததாக தனது 67-வது திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்காலிகமாக தளபதி 67 – என தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார்.
படத்தை 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து வருகிறார். படத்திற்கான பூஜை கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. பூஜையை மட்டும் அறிவிக்காமல் ஒரு குட்டி டீஸருடன் அறிவிப்பை வெளியிட படக்குழு காத்துள்ளனர்.
இந்த நிலையில், தற்போது தளபதி 67 படத்தில் சில பிரபலங்கள் தான் நடிப்பதை உறுதி செய்துள்ளார். அவர்கள் யார் யார் என்றால், ஒருவர் நடிகர் மன்சூர் அலிகான், ஒருவர் இயக்குனர் கெளதம் மேனன். இருவருமே தளபதி 67 படத்தில் நடிப்பதாக சமீபத்திய பேட்டி ஒன்றில் உறுதி படுத்தியுள்ளனர்.
இதையும் படியுங்களேன்- விரைவில் ‘7 ஜி ரெயின்போ காலனி 2’.! தயாரிப்பாளர் கொடுத்த சூப்பர் தகவல்.!
மேலும் தளபதி 67 திரைப்படம் 100% லோகேஷ் கனகராஜ் படமாக எடுக்கப்படவுள்ளதாகவும், ஏற்கனவே படத்தின் 2 பாடல்கள் தயார் செய்து முடித்துவிட்டதாகவும் லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும், படத்தில் ரத்ன குமார் வசனம் எழுதுவதாகவும், படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்ற சூப்பர் அப்டேட்டையும் கொடுத்துள்ளார். இந்த அப்டேட்டை பார்த்த விஜய் ரசிகர்கள் தரமான சம்பவம் காத்திருக்கிறது. என கருத்துக்களை கூறி வருகிறார்கள்.
சென்னை : எழும்பூர் அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவை ஒட்டி பன்னாட்டுக் கருத்தரங்கு…
மும்பை : ஷங்கர் இயக்கத்தில் அரசியல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் வரும் ஜனவரி 10-ஆம்…
சென்னை : தமிழ்நாட்டில் வரும் 10, 11 ஆகிய நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை ஆய்வு…
திருப்போரூர் :செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் பகுதியில் உள்ள முருகன் கோவிலுக்கு கடந்த அக்டோபர் மாதம் சென்னையை சேர்ந்த தினேஷ் என்பவர்…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக 24வது மாநில மாநாடு கடந்த ஜனவரி 3-ஆம் தேதி விழுப்புரம் – சென்னை தேசிய…
சிட்னி : பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரை ஆஸ்ரேலியா கைப்பற்றியுள்ளது இந்திய அணிக்கும் ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த…