Thangalaanmovie [File Image]
நடிகர் விக்ரம் தற்போது இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தங்கலான்’ என்ற வித்தியாசமான கதைகளத்தை கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக பேட்ட, மாஸ்டர் பட புகழ் நடிகை மாளவிகா மோகனன் நடிக்கிறார். பார்வதி, பசுபதி, உள்ளிட்ட சில பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள்.
படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வரும் நிலையில், படம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்தார்கள்.
முன்னதாகவே படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்ற தகவலும் வெளியாகி இருந்தது. ஆனால், அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்த நிலையில், படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு இன்று (அக் 27) மாலை அறிவிக்கப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது படம் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, ‘தங்கலான்’ திரைப்படம் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பு நிறுவனமான ஸ்டுடியோ க்ரீன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அது மட்டுமின்றி படத்தின் டீசர் வரும் நவம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் தற்போது மிகவும் உற்சாகத்தில் உள்ளனர்.
இதற்கிடையில், கெளதம் மேனன் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவநட்சத்திரம் திரைப்படம் வரும் நவம்பர் 24-ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்தின் டிரைலரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. எனவே, இந்த ஆண்டு துருவநட்சத்திரம் படம் அடுத்த ஆண்டு ‘தங்கலான்’ படம் வெளியாவதால் விக்ரம் ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் , பஞ்சாப் கிங்ஸ் அணியும் விளையாடின. இதில்…
லக்னோ : இன்று ஐபிஎல் 2025 போட்டியில் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும்…
லக்னோ : இன்று (ஏப்ரல் 1) நடைபெறும் ஐபிஎல் 2025 சீசனின் 13வது லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ்…
சென்னை : தமிழ் சினிமாவில் கமர்சியல் படங்கள் மூலம் எடுத்து ஹிட் கொடுத்து சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் இயக்குனர்…
லக்னோ : தேசிய கல்வி கொள்கை 2020-ல் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய கோட்பாடுகளில் ஒன்று மும்மொழி கொள்கை. இந்த மும்மொழி கொள்கை…
கேரளா : மலையாள நடிகர் மோகன்லாலின் ''எம்புரான்'' படம் ஒரு புறம் வசூல் சாதனை செய்தாலும், மறுபுறம் சர்ச்சைகளால் சூழந்துள்ளது.…