விஜய் நடித்து வரும் லியோ திரைப்படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்புகள் எழுந்துள்ள நிலையில், படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் காத்துள்ளனர். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன் சர்ஜா, த்ரிஷா, பிரியா ஆனந்த், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், மன்சூர் அலிகான் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். படம் வெளியாவதற்கு முன்பு படத்திற்கான இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெறும் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ஆனால், சில காரணங்கள் நடைபெறாது என படத்தின் தயாரிப்பு நிறுவனம் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்தது. இரண்டாவது
ரசிகர்கள் சோகத்தில் இருந்த காரணத்தால் தயாரிப்பு நிறுவனம் லியோ படத்தின் இரண்டாவது பாடலான படாஸ் பாடலை வெளியீட்டு இருந்தது. அந்த பாடலை கேட்ட ரசிகர்களும் உற்சாகம் அடைந்து படத்தின் அடுத்ததடுத்த அப்டேட்டுகளுக்கு காத்திருந்தார்கள்.
இந்த நிலையில், லியோ திரைப்படத்தின் புதிய அப்டேட் ஒன்று இன்று மாலை வெளியாவதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் நிறுவனம் முன்னனதாக அறிவித்திருந்தது. இதனையடுத்து, என்ன அப்டேட்-ஆக இருக்க போகிறது என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த நிலையில், படத்தின் ட்ரைலருக்கான அப்டேட் தான் வெளியாகியுள்ளது.
அதன்படி, லியோ திரைப்படத்தின் டிரைலர் வரும் அக்டோபர் 5-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் அனைவரும் தற்போது மிகவும் உற்சாகத்தில் உள்ளனர். மேலும், இந்த திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…
சென்னை : இன்று (ஜனவரி 18) சனிக்கிழமை தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில்…
சென்னை : தாம்பரம் காவல் எல்லைக்குட்பட்ட சேலையூர், மணிமங்கலம், கூடுவாஞ்சேரி, மறைமலைநகர், உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நாளில் செயின் பறிப்பு…
சென்னை : குட் நைட் என்ற அருமையான படத்தை கொடுத்து மக்கள் மனதில் இடம்பிடித்த மணிகண்டன் அடுத்ததாக மீண்டும் அதைப்போல ஒரு…
சென்னை :மணப்பட்டி சிக்கன் சுக்கா அசத்தலான சுவையில் செய்வது எப்படி என பார்க்கலாம். தேவையான பொருட்கள்; சிக்கன்- ஒரு கிலோ…
சென்னை : கடந்த ஜனவரி 16ஆம் தேதியன்று சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் சர்வதேச புத்தக காட்சித் திருவிழா நடைபெற்றது. …