லியோ திரைப்படத்தின் மூன்றாவது பாடல் எப்போது வெளியீடு? அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம்!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் வரும் அக்டோபர் 19-ஆம் தேதி வெளியாகிறது. இதனையடுத்து படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது. 7 ஸ்க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்து இருக்கிறார்.
படத்தில் த்ரிஷா, பிரியா ஆனந்த், அர்ஜுன் சர்ஜா, மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். படத்தின் டிரைலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகமாக்கியது.
இந்த நிலையில், படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்திற்கான 3-வது பாடல் எப்போது வெளியாகும் என்பதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி, ‘அன்பெனும்’ என்று தொடங்கும் லியோ படத்தின் மூன்றாவது பாடல் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே லியோ படத்தில் இருந்து நா ரெடி தான் மற்றும் படாஸ் ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் நாளை மூன்றாவது பாடல் வெளியாகவுள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். நாளை வெளியாகும் பாடல் குடும்ப பாடலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.