பிக்பாஸ் சீசன் 8 எப்போது தொடங்குகிறது? போட்டியாளர்கள் யார்? விவரம் இதோ!!
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி அக்டோபர் 6 முதல் தொடங்கும் என விஜய் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
சென்னை : ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வருகிறது என்றாலே, மக்கள் பொழுதுபோக்குக்காக எதிர்பார்க்கும் விஷயங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை 7 சீசன்கள், வெற்றிகரமாக முடிந்த நிலையில், அடுத்ததாக 8-வது சீசன் தொடங்குவதற்கான வேலைகள் மும்மரமாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது.
தொகுப்பாளர் மாற்றம்
கடந்த 7 சீசன்களாக நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வந்த, கமல்ஹாசன் படங்களில் கவனம் செலுத்தி வருவதன் காரணமாக 8-வது சீசனை “தொகுத்து வழங்கவில்லை” என கூறி, தற்காலிகமாக விலகிக்கொள்வதாக அறிவித்து இருந்தார். அவரை தொடர்ந்து நிகழ்ச்சியை யார் தொகுத்து வழங்குவார்? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்த நிலையில், மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்குவதாகவும் அறிவிக்கப்பட்டது.
விஜய் சேதுபதி, தனக்கு தோணும் கருத்துக்களை வெளிப்படையாகவே கூறிவிடுவார். எனவே, பிக் பாஸ் நிகழ்ச்சியை அவர் தொகுத்து வழங்கினால் சரியாக இருக்கும், என அவர் மீதும் மக்கள் எதிர்பார்ப்பு வைத்து நிகழ்ச்சியைப் பார்க்கக் காத்திருக்கிறார்கள்.
வந்தது தொடக்க தேதி
இந்த நிலையில், மக்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த, “பிக் பாஸ் சீசன் 8” நிகழ்ச்சிக்கான தொடக்கத் தேதி என்னவென்று விஜய் தொலைக்காட்சி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி, நிகழ்ச்சி அக்டோபர் 6 முதல் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் நாள் என்பதால் அன்று ஒரு நாள் மட்டும் 6 மணிக்கு ஒளிபரப்பாகும்.
#GrandLaunch of Bigg Boss Tamil Season 8 – அக்டோபர் 6 முதல் மாலை 6 மணிக்கு நம்ம விஜய் டிவில.. ????
உங்க விருப்பமான show.. இன்னும் நெருக்கமா.. ❤️???? ஏன்னா, இந்த வாட்டி “ஆளும் புதுசு.. ஆட்டமும் புதுசு..” ???? #VJStheBBhost @VijaySethuOffl ???? pic.twitter.com/Cq71wCJfHN— Vijay Television (@vijaytelevision) September 24, 2024
மற்ற நாட்களில், வழக்கம்போல் திங்கள் முதல் வெள்ளி இரவு 10:00 மணிக்கும், சனி-ஞாயிறு இரவு 09:30 மணிக்கும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். ஹாட்ஸ்டார் தளத்தில் 24×7 லைவ் ஸ்ட்ரீமிங் வசதியும் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலந்துகொள்ளவுள்ள போட்டியாளர்கள்?
நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ள பிரபலங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால், தகவல்களாக யாரெல்லாம் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்பதற்கான விவரம் கிடைத்துள்ளது.
- யூடியூபர் TTF வாசன்
- ஷாலின் சோயா ( குக் வித் கோமாளி பிரபம்)
- ப்ரீத்தி முகுந்தன் (ஸ்டார் ஹீரோயின்)
- ஜாக்கி ஆனந்தி (RJ)
- யூடியூபர் வில்ஸ்பட்
- நடிகர் ரியாஸ் கான்
- நடிகை பூனம் பஜ்வா
- சம்யுக்தா விஸ்வநாதன் (கட்சி சேர பாடல் பிரபலம்)
- நடிகர் ஜெகன்
- நடிகர் ரஞ்சித்
- குரேஷி (குக் வித் கோமாளி)
- அருண் பிரசாந்த் (பாரதி கண்ணம்மா)
- அமலா ஷாஜி (யூடியூபர்)
- மாகாபா ஆனந்த் (விஜய் டிவி பிரபலம்)
- குரேஷி (kpy பிரபலம்)