மதிப்பை வைத்து நான் என்ன செய்வது? விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த எழுத்தாளர் ஜெயமோகன்!!

Published by
பால முருகன்

B. Jeyamohan கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியாகி மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று மிகப்பெரிய ஹிட்டான திரைப்படம் மஞ்சும்மல் பாய்ஸ். இந்த திரைப்படத்தை மக்கள் பலரும் பாராட்டிய நிலையில் எழுத்தாளர் ஜெயமோகன் ‘குடிப்பொறுக்கிகளின் கூத்தாட்டம்’ என படத்தை கடுமையாக விமர்சித்து எழுதி இருந்தார். இவர் விமர்சித்து எழுதியது பெரும் சர்ச்சையாகி அவர் மீது கண்டங்கள் எழுந்தது.

read more- ரஜினி பட வசூலை ஓட விட்ட ‘மஞ்சும்மல் பாய்ஸ்’! தமிழ்நாட்டில் முரட்டு சம்பவம்!

ஜெயமோகன் எழுதியதை பார்த்த பலரும் உங்கள் மேல் இருந்த மரியாதையே போயிற்று என அவரை விமர்சிக்க தொடங்கினார்கள். இதனையடுத்து, இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், ஜெயமோகன் மீண்டும் பதிவு ஒன்றை எழுதியுள்ளார். அதில் மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்துவிட்டு நீலமலைக்கு சென்றதில் ஒருவர் உயிரிழந்த செய்தித்தாளையும் வெளியீட்டு மகேஷ் சுப்ரமணியம் என்பவர் அவருக்கு எழுதிய கடிதம் ஒன்றிற்கும் பதில் அளித்தும் இருக்கிறார். 

ஜெயமோகனுக்கு மகேஷ் சுப்ரமணியம்  எழுதியது

அன்புள்ள ஜெ ” மஞ்சும்மல் பாய்ஸ் பற்றிய உங்கள் கருத்து எதிர்வினை மிகையானது என்பது என் எண்ணம்.  பலர் உங்கள் மீதிருந்த மரியாதையே போய்விட்டது என்று எழுதியிருந்தார்கள். கேரளத்தில் உங்கள் மேல் பெரிய மதிப்பு உண்டு என கேள்வி பட்டு இருக்கிறேன். அங்கிருந்து வரும் விமர்சனங்களை பார்க்கையில் வருத்தமாக உள்ளது. உங்கள் கருத்துக்களை நீங்கள் இப்படி முன்வைத்திருக்கவேண்டுமா?” என்று கேட்டு இருந்தார்.

எழுத்தாளர் ஜெயமோகன் பதில்

இதற்கு பதில் அளிக்கும் விதமாக எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியதாவது ” நான் எப்போதும் சொல்லிவருவதுதான் இது. நான் இயல்பாக எதிர்வினையாற்ற விரும்புகிறேன். அது மிகையாகிப்போவது அவ்வப்போது வழக்கம்தான். ஆனால் என் இயல்பை நான் முழுமையாக மாற்றிக்கொண்டால் என் உணர்ச்சிகரத்தை இழந்துவிடுவேன், அப்படி, இழந்தால் அது இலக்கியவாதியாக எனக்கு ஒரு இழப்பு. என்னைப்பொறுத்தவரை நான் பார்த்து வளர்ந்த நல்ல இலக்கியவாதிகளும் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள்.

READ MORE – கமல் சாரை பார்த்தது கனவு மாதிரி இருக்கு! ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ இயக்குனர் எமோஷனல்!

1999 முதல் யானைகளின் காலடியில் பீர்ப்புட்டிகள் குத்தி உருவாகும் அழிவுகளை கண்டு வருகிறேன். கொலை அல்லது தற்கொலை வரைச் செல்லும் உச்சகட்ட உணர்ச்சிகளை அடைந்திருக்கிறேன். அந்த உணர்வுக் கொந்தளிப்புகள் இல்லாமலாகும்போது கதை எழுதுவதை நிறுத்திக்கொள்வேன்.  மஞ்சும்மல் பாய்ஸ் படத்தை பார்த்தபோது சட்டென்று எழுந்த கடும் ஒவ்வாமை, ஒன்றுடனொன்று தொடுத்து உருவான நினைவுகள் அப்பதிவை எழுத செய்தது.

read more- கதறி அழுது கால்ஷீட் கேட்ட அறிமுக இயக்குனர்? பீக்கில் இருந்தபோதே யோசிக்காமல் கொடுத்த சரத்குமார்!

நான் அப்படி எழுதிய போது வந்த அந்த உணர்வுகள் உண்மையானவை. அவை மிகமிகத் தீவிரமாகவே என்னில் நிகழ்ந்தன. ஆகவே அந்த பதிவு மிகையானது என எனக்குத் தெரிந்தாலும் அதை நான் நிராகரிக்கவில்லை. யோசித்துப்பார்க்கையில் அது ஒருவகையில் நல்லது என்னும் எண்ணம் இன்று உருவாகிறது. யானைடாக்டர் போன்ற ஒரு கதை எத்தனை லட்சம் விற்றாலும் இந்த குடிக்கும்பலைச் சென்றடையாது. என் கருத்து அந்தச் சினிமா திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கையில் வெளிவந்தமையால், அந்த கடுமையான சொற்களால் இவ்வளவு பேசப்பட்டது. அடிப்படையில் நான் சொன்னது சென்று சேர்ந்தும் விட்டது.

சினிமாவை மட்டுமே கவனிக்கிறார்கள்

தமிழகத்திலும், கேரளத்திலும் பெரும்பாலும் சினிமாவை மட்டுமே கவனிக்கிறார்கள். அதைப்பற்றிய விவாதங்களை மட்டுமே அறிகிறார்கள். அவ்வழியாகச் சில அடிப்படைக் கருத்துக்கள் அவர்களிடம் சென்று சேர்ந்தால்தான் உண்டு.மஞ்சும்மல் பாய்ஸ் பற்றி நான் எழுதிய பிறகு தொடர்ச்சியாக 3 நாட்கள் எனக்கு இடைவிடாமல் எனக்கு தொலைபேசி அழைப்புகள் வந்து கொண்டு இருந்தது.  எல்லாமே வெவ்வேறு சிறு,பெரு செய்தி ஊடகங்கள். அவர்கள் எவரும் யானைடாக்டர் கே பற்றி ஓர் நிகழ்ச்சி நடத்த மாட்டார்கள். அவ்வாறு நடத்தினால் மக்கள் அதைப் பார்க்கவும் மாட்டார்கள்.

மக்கள் மீது நம்பிக்கை உண்டு

படம் பற்றி நான் சொன்ன அடிப்படையான விஷயம் மக்களின் கவனத்தில் எப்படியோ தெரிந்திருக்கும். எனக்கு கேரளத்திலும் தமிழகத்திலுமுள்ள மக்கள் மேல் நம்பிக்கை உண்டு. குறிப்பாக கேரள மக்கள் மேல். இந்த விவாதத்திற்குப்பின் மலையாளிகள் காடுகளில் நடந்துகொள்ளும் விதம் பற்றிய ஒரு குற்றவுணர்வு அல்லது கண்டனம் கண்டிப்பாக அவர்களிடம் இருக்கும்.

எனக்கு தான் ஆதரவு

நான் கூறிய விமர்சனத்தை வைத்து ஒரு பத்திரிகை சிறு வாக்கெடுப்பு நடத்தியது. அதில் நான் கூறிய கருத்து சரி தான் என 53 சதவீதம்பேர் என் தரப்பையே ஆதரித்துள்ளனர்.  இன்னும் அது பெருக தான் செய்யும். குடிக்கேரளம் ஒன்றுண்டு, கூடவே கல்விக்கேரளமும் ஒன்று உண்டு. இந்த விவாதமும் அதையே காட்டுகிறது.

அரசியல்வாதிகளின் கண்ணில் நான் என்னவாக தெரிவேன்?

கடந்த வாரங்களில் தமிழக இளைஞர் குழுவினர் காடுகளுக்குள் மதுப்புட்டிகளுடன் சென்று பிடிபட்டுள்ளனர். அபாயகரமாக காட்டுக்குள் சிக்கிக்கொண்டும், பூச்சிகளால் தாக்கப்பட்டும் காயமடைந்துள்ளனர். காயமடைவது நல்லது என்றே நினைக்கிறேன். ஆனால் இவர்கள் காட்டுக்குள் அள்ளி இறைக்கும் கண்ணாடிச்சில்லுகள் இன்னும் ஐம்பதாண்டுக்காலம் அங்கே கிடந்து பேரழிவை உருவாக்கும்.

READ MORE – நான் சிகரெட் பிடிச்சிட்டு இருந்தேன்..! ‘தனுஷ் பயங்கர டென்ஷன்’ ஆயிட்டாரு – ராஜ்கிரண்!

மட்டாஞ்சேரி மாஃபியா

தங்களுடைய போதையுலக வாழ்க்கையையே சினிமாவாக எடுத்து அதை கேரளயதார்த்தம் என உலகு முன் காட்டும் ‘மட்டாஞ்சேரி மாஃபியா’ எவ்வளவு சக்தி வாய்ந்தது. எவ்வளவு ஊடக பலம் உடையது. அவர்கள் சும்மா இருப்பார்களா என்ன? மட்டாஞ்சேரி மாஃபியா என ஒரு சொல்லாட்சி இருப்பது இந்த விவாதத்திற்குப் பின் கேரள இதழாளர்கள் எழுதியதன் வழியாகவே எனக்கு தெரியவந்தது. ஏற்கனவே அவர்கள் மேல் கடும் விமர்சனங்கள் உள்ளது.

இலக்கியத்தின் அடிப்படையே விமர்சனம்

நவீன இலக்கியத்தின் அடிப்படையே விமர்சனம்தான். சமூக விமர்சனமே நவீன இலக்கியத்துக்கும் மரபிலக்கியத்துக்குமான அடிப்படையான வேறுபாடு. மரபிலக்கியம் மக்கள் விரும்புவதைச் சொல்கிறது, மக்களை அறிவுறுத்தி வழிகாட்டுகிறது. நவீன இலக்கியம் சமூகம் மீது, தனிமனிதன் மீது, மதம் அரசு உள்ளிட்ட அமைப்புகள் மீது விமர்சனங்களை முன்வைக்கிறது. அந்த விமர்சனத்துக்கு அடிப்படை எழுத்தாளன் கொள்ளும் முரண்படுதல், ஒவ்வாமை, சீற்றம், அறவுணர்வு, துயரம் ஆகியவையே.

இரண்டு கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டது

இரண்டு கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன. ஒன்று, இப்படி முன்னோடி எழுத்தாளர்கள் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனரா? இப்படி பொதுமைப்படுத்தலாமா? கடும் விமர்சனங்களை முன்வைக்காத முன்னோடி எழுத்தாளர்களே இல்லை. பாரதி, புதுமைப்பித்தன், க.நா.சு, சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன் என. காங்கிரஸ் தலைவர் வி.கிருஷ்ணசாமி ஐயரை ‘சீச்சீ நாயும் பிழைக்கும் இப்பிழைப்பு’ என எழுதினார் பாரதி.  எம்.ஜி.ஆரை கோமாளி என சுந்தர ராமசாமி எழுதினார். தன் மொழியை தானே புகழ்துகொள்பவர்கள் தன்னைத்தானே நக்கிக்கொள்ளும் நாய்கள் என்றார் ஜெயகாந்தன்.

READ MORE – பாலா சார் என்னை டார்ச்சர் பண்ணல…அந்தர் பல்டி அடித்த மலையாள நடிகை.!

இங்கே ஒன்று கவனிக்கவேண்டும். ஒரு நாலாந்தர அரசியல்வாதி இழிவாகப்பேசுவதை அனுமதிக்கும் நம் சமூகம் எழுத்தாளன் பேசும்போது அடையும் சீற்றம் ஒரே காரணத்தால்தான். அரசியல்வாதிக்கு அமைப்புபலமும் பணமும் உண்டு. எழுத்தாளன் தனியானவன். ஆகவே எளிய இலக்கு. என்னை சங்கி என்பவர்களுக்கு நான் சங்கி அல்ல, எனக்கு எந்த அமைப்புபலமும் இல்லை என தெரியும். அவர்கள் வசைபாடுவது அந்த நம்பிக்கையால்தான்.

மரியாதையை வைத்து நான் என்ன செய்வது?

உங்கள் மேல் இருந்த மரியாதையே போயிற்று’ என்று எனக்கு சிலர் எழுதி அனுப்புவார்கள். அவர்களுக்கு என் மேல் மரியாதை இருந்ததே எனக்கு அப்போதுதான் தெரியவரும். அவர்களுக்கே அப்போதுதான் தெரியவந்திருக்கும். ஒரு சினிமா பற்றி, அல்லது ஒரு நபர் பற்றி நான் சொன்ன கருத்தால் ஒருவரின் மனதில் என்மேல் இருந்த மதிப்பு இல்லாமலாயிற்று என்றால் அது என்னவகை மதிப்பு? அந்த மதிப்பை வைத்து நான் என்ன செய்வது? அவர்கள் உடனடியாக மதிப்பை ரத்துசெய்துவிட்டு விலகிச்செல்வதே எனக்கு அவர்கள் செய்யும் மரியாதை” எனவும் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ளார்.

Published by
பால முருகன்

Recent Posts

“அரசியல் அராஜகம் ஒழிக, நீதி வெல்லட்டும்” – நடிகை கஸ்தூரிக்கு நவ.29 வரை நீதிமன்றக் காவல்!

சென்னை : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில், நடிகை கஸ்தூரியை வருகிற 29ஆம் தேதி வரை நீதிமன்றக்…

34 mins ago

“வேறு வழி இல்லை!”டெல்லி அமைச்சர் திடீர் ராஜினாமா.! கெஜ்ரிவாலுக்கு பரபரப்பு கடிதம்.!

டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பொறுப்பில் இருந்த கைலாஷ் கெலாட் தனது அமைச்சர் பதவி மற்றும் ஆம்…

56 mins ago

30 நிமிடத்தில் டெல்லி டூ அமெரிக்கா செல்லலாம்.! எலான் மஸ்க் பலே திட்டம்.!

சான் பிரான்சிஸ்கோ : உலக பணக்காரர்களில் முதன்மையானவர்களாக இருக்கும் எலான் மஸ்க், தனது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டார்ஷிப் மூலம்…

2 hours ago

குடை எடுத்துக்கோங்க… இன்று 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!

சென்னை : மாலத்தீவு மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகள் முதல் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் வரை…

3 hours ago

இஸ்ரேல் பிரதமர் வீட்டின் தோட்டத்தில் குண்டு வீச்சு.. பதுங்கு குழிக்குள் நெதன்யாகு?

இஸ்ரேல் : வடக்கு இஸ்ரேலிய நகரமான  சிசேரியாவில் உள்ள இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வீட்டிற்கு வெளியே பிளாஷ் வெடிகுண்டுகள்…

3 hours ago

விடுதலை 2 படத்தின் ‘தினம் தினமும்’ பாடல் வெளியீடு.!

சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் சூரி நடிக்கும் "விடுதலை 2" படத்தின் பர்ஸ்ட் சிங்கிளான 'தினம்…

4 hours ago