ஜெயிலர் வடை மிஷினை எப்ப நிறுத்தப்போறீங்க? ரசிகர்களை கடுப்பாக்கிய ப்ளூ சட்டை மாறன்!
ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் 500 கோடிகளுக்கு மேல் வசூல் செய்ததாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தாலும் கூட சினிமா விமர்சகரும், இயக்குனருமான ப்ளூ சட்டை மாறன் தொடர்ச்சியாக தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் ஜெயிலர் வசூலை விமர்சித்து பதிவுகளை வெளியீட்டு வருகிறார்.
ஜெயிலர் வசூல் மட்டுமின்றி ரஜினி பற்றியும் அடிக்கடி விமர்சித்து பதிவிட்டு வருகிறார். குறிப்பாக ஜெயிலர் படத்தின் இசைவெளியீட்டு விழாவில் ரஜினி காகம் பருந்து கதை கூறியதிலிருந்து ரஜினி உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் காலில் விழுந்த வரை தொடர்ச்சியாக ரஜினியை விமர்சித்து ட்ரோல் செய்து பதிவுகளை வெளியீட்டு வருகிறார்.
இந்த நிலையில், தற்போது தனது சமூக வலைதள பக்கங்களில் ஜெயிலர் வசூல் குறித்து பதிவிட்டுள்ளார். அதில் ” ஜெயிலர் வடை மிஷினை எப்ப நிறுத்தப்போறீங்க? நீங்க என்னதான் முக்குனாலும் விக்ரம் படத்துடன் ஒப்பிட்டால் இது ஒரு ஆறிப்போன உப்மா மேக்கிங்தான். இங்கே யார் அசல் நம்பர் ஒன் என்பதற்கு லியோ அல்லது இந்தியன் 2 படங்கள் பதில் சொல்லலாம்.
ஒருவேளை இவ்விரு படங்களும் வசூலில் தோற்றாலும்.. காஸ்டிங், மேக்கிங் உள்ளிட்ட பல காரணங்களுக்காக நிச்சயம் பேசப்படும். ஜெயிலர் ஒரு இன்ஸ்டன்ட் உப்மா. பார்த்தவுடன் மறந்து போகின்ற படைப்பு. தட்ஸ் ஆல். உண்மையை ஏற்க விரும்பாத பருந்துக்குஞ்சுகள் கமண்ட்டில் வழக்கம்போல கதறி மாயுங்கள். யாரும் கண்டுகொள்ளப்போவதில்லை” என பதிவிட்டுள்ளார்.
இவருடைய பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மேலும் ஜெயிலர் திரைப்படம் உலகம் முழுவதும் 600 கோடி வசூலை நெருங்கி பல சாதனைகளை படைத்தது வருகிறது. குறிப்பாக தமிழில் வெளியான படங்களில் அதிகம் வசூல் செய்த இரண்டாவது தமிழ் படம் என்ற சாதனையை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.