கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி இதுவரை 6 -சீசன்களை வெற்றிகரமாக கடந்துள்ள நிலையில், அடுத்ததாக 7-வது சீசன் நிகழ்ச்சி வரும் அக்டோபர் மாதம் 1-ஆம் தேதி ஒளிபரப்பாகிறது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் இந்த நிகழ்ச்சிக்கென்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்றே சொல்லலாம். இதுவரை ஒளிபரப்பான 6 சீசன்களுமே மிகப்பெரிய ஹிட்டும் ஆகியுள்ளது.
அதைப்போல, இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களும் பெயரை வாங்கி கொடுத்துள்ளது. இந்நிலையில், மிக்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பிக் பாஸ் 7-வது சீசன் நிகழ்ச்சி அக்டோபர் 1-முதல் தொடங்குகிறது. இந்த முறை யாரெல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பும் அதிகமாகியுள்ளது.
காத்திருக்கும் சஸ்பென்ஸ்
வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற உறுதியான தகவல் எப்போதும் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்பே வெளியாகிவிடும். ஆனால், இந்த முறை இந்த சீசனில் யாரெல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்ற எந்த உறுதியான பிரபலங்களின் பெயர்களும் வெளியாகவில்லை. ஒரு சில பிரபலங்களின் பெயர்கள் மட்டும் தான் வெளியாகியுள்ளது.
ஆனால், அதிகாரப்பூர்வமாகவோ எந்த ஒரு பிரபலங்களின் பெயர்களும் வெளியாகவில்லை. நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் பெயர் வெளியே வரக்கூடாது என்ற காரணத்துக்காக சிறிய தகவலை கூட கசிய விடாமல் ரசிகர்களுக்கு சஸ்பென்ஸாக பிக்பாஸ் குழு வைத்திருக்கிறார்கள். எனவே, இந்த நிகழ்ச்சியில் எந்தெந்த பிரபலங்கள் எல்லாம் கலந்துகொள்ள போகிறார்கள் என்பது தெரிய வரும்.
பிக்பாஸ் நிகழ்ச்சியை எப்போது எதில் பார்க்கலாம்?
பிக் பாஸ் நிகழ்ச்சி அக்டோபர் 1-ஆம் தேதி இரவு 6 மணி முதல் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது. முதல் நாள் என்பதால் மாலை 6 மணிக்கு ஆரம்பித்து கோலாகலமாக நிகழ்ச்சி தொடங்கப்படவுள்ளது. இரவு 11 மணி வரை பிரமாண்டமாகவும் நடைபெறும் என கூறப்படுகிறது.
மற்ற நாட்களில் அதாவது அக்டோபர் 2-ஆம் தேதியிலிருந்து இரவு 9.30 மணி முதல் 10.30 மணி வரை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும். விஜய் தொலைக்காட்சியில் பார்க்க முடியவில்லை என்றால் நீங்கள் டிஸ்னி + ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
24 மணி நேர ஒளிபரப்பு உண்டா?
எப்போதும் ஒரு மணி நேரம் மட்டுமே ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சி கடந்த 6-வது சீசனிலிருந்து ஹாட்ஸ்டாரில் மட்டும் 24 மணி நேரம் பார்க்கும் வசதியை கொண்டுவந்தார்கள். இதன் மூலம் வீட்டில் இருக்கும் பிரபலங்கள் என்னென்ன செய்கிறார்கள் என்பதை பார்க்கலாம். அதைப்போலவே இந்த முறை அதாவது 7-வது சீசனிலும் அதே வசதி கொண்டு வரப்பட்டுள்ளது. எனவே, ஹாட்ஸ்டார் மூலம் 24 மணி நேரமும் நீங்கள் பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்க்கலாம்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…