இது என்னடா புதுசா இருக்கு! காதலிட்ட காதல சொல்லாம, அவங்க அம்மா கிட்டையா சொல்லுவாங்க!
நடிகர் சூர்யாவின் நடிப்பில் உருவாகியுள்ள காப்பான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் ஆர்யா கலந்து கொண்டார். நடிகர் ஆர்யாவுக்கும், சாயிசாவுக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், இவ்விழாவில் கலந்து கொண்ட நடிகர் ஆர்யா பேசுகையில், தன்னுடைய காதல் கதையை கூறியுள்ளார். அப்போது பேசிய அவர், தன்னுடைய காதலை முதலில் சாயிஷாவிடம் சொல்லவில்லையாம். ஏனென்றால், அவர் மற்ற பெண்களிடம் காதலை நேரடியாக சொல்லி, அது தவறாக சென்றுள்ளதாம்.
அதனால், சாயிஷாவிடம் சொல்லாமல், சாயீஷாவின் அம்மாவிடம் தான் சொன்னாராம். அதன் பின் தான் சாயிஷாவுக்கு தெரியுமாம்.