‘இரும்புக்கை மாயாவி’ கை மாறி அமீர்கானுக்கு போன காரணம் என்ன?

இரும்புக்கை மாயாவி படத்தில் அமீர்கானை நடிக்க வைக்க சூர்யா சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

aamir khan lokesh kanagaraj

சென்னை : லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா விக்ரம் படத்தில் நடித்த ரோலக்ஸ் கதாபாத்திரமே ரசிகர்களுக்கு மறக்க முடியாத ஒரு கதாபாத்திரமாக அமைந்தது என்றே சொல்லலாம். எனவே, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சூர்யா ஒரு முழு நேர திரைபடத்தில் நடிக்கிறார் என்றால் நிச்சயமாக அந்த படம் எந்த அளவுக்கு இருக்கும் என்பதை பற்றி சொல்லியா தெரியவேண்டும்.

விக்ரம் படத்தில் நடிப்பதற்கு முன்பே சூர்யா லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘இரும்புக்கை மாயாவி’ என்கிற படத்தில் நடிக்கவிருந்தார். ஆனால், சில காரணங்களால் இன்னும் அந்த படம் தொடங்கப்படாமல் இருக்கிறது. அந்த படத்தின் கதை தனக்கு மிகவும் பிடித்த கதை என்றும்…கண்டிப்பாக அந்த படம் அனைவர்க்கும் பிடிக்கும் என சூர்யா தெரிவித்து இருந்தார்.

அதைப்போலவே இயக்குநர் லோகேஷ் கனகராஜும் தன்னுடைய கனவு படம் என்றால் இது தான் எனவும் தெரிவித்திருந்தார். இந்த சூழலில் படம் எப்போது உருவாகும் படத்தை எப்போது நாம் பார்க்கலாம் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துள்ளார்கள். அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில், சமீபத்தில் இந்தப் படத்தில் சூர்யா நடிக்கவில்லை என்றும், அவருக்கு பதில் அமீர்கான் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் பரவியது.

இதனையடுத்து, தற்போது ‘இரும்புக்கை மாயாவி’ படம் கைமாறி போன காரணம் பற்றிய தகவலும் வெளிவந்து இருக்கிறது. அதன்படி, அமீர்கானை லோகேஷ் கனகராஜ் சந்தித்த போது அவரிடம் இந்த கதையை பற்றி கேட்டுள்ளாராம். அதற்கு லோகேஷ் கனகராஜ் கதையை பற்றி தெரிவிக்க உடனே அமீர்கானுக்கு மிகவும் பிடித்துவிட்டதாம்.

உடனடியாக நானே இந்த படத்தில் நடிக்கிறேன்…சூர்யாவிடம் நானே பேசிக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு சூர்யாவிடம் கேட்டாராம். உடனே சூரியாவும் நண்பர் கேட்கிறார் என்பதற்காக சம்மதம் தெரிவித்துவிட்டதாகவும் நம்மபதக்க சினிமா வட்டாரத்தில் இருந்து கிடைத்த தகவலின் படி கூறப்படுகிறது. இருப்பினும், இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்