இயக்குனர் அருண் ராஜா காமராஜ் இயக்கத்தில் நடிகர் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”.போனிகபூர் தயாரிக்கும் இந்தப் படத்தில் கதாநாயகனாக உதயநிதி ஸ்டாலினும், கதாநாயகியாக தன்யா ரவி சந்திரன் நடித்துள்ளார். இந்த படம் ஆர்டிகிள் 15 எனும் பாலிவுட் படத்தின் தமிழ் ரீமேக்.
இந்த படம் வரும் மே 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்திற்கான டிரைலர் நேற்று வெளியானது. இந்த படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது .
அதில் சிவகார்த்திகேயன், உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ், அருண் ராஜா காமராஜ், போனிகபூர், தன்யா ரவி சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
அப்போது விழாவில் ஆர்.ஜே.பாலாஜி பேசியது ” தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 445 கிராமங்களில் இன்னும் தீண்டாமை கொடுமைகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. ஜாதி கொடுமைகளுக்கு எதிராக படம் வரவேண்டும்.
பரியேறும் பெருமாள் ஜெய்பீம், மற்றும் பா.ரஞ்சித் படங்கள் வரும் போது இல்லாத சாதியை பற்றி திரும்ப பேசுகிறார்கள் என கல்லூரி மாணவர்கள் சிலர் சொன்னார்கள். அந்த அளவுக்கு கல்லூரி மாணவர்கள் மனதில் ஜாதி எண்ணம் புரையோடி உள்ளது” என்று கூறியுள்ளார். இவர் பேசியது தற்போது பேசும்பொருளாகியுள்ளது.
சென்னை : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
சென்னை : சர்வதேச மாஸ்டர்ஸ் லீக் T20 தொடரில், 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. சர்வதேச…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ஆம் ஆண்டு விழா மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் இன்று…
சென்னை : பனையூரில் உள்ள த.வெ.க. தலைவர் விஜய் வீட்டிற்குள் செருப்பு வீசிய நபரால் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இளைஞர்…
சேலம் : பாமக கௌரவ தலைவரும், பாமக சட்டமன்ற குழுத் தலைவருமான ஜி.கே.மணியின் இல்ல திருமண விழா நேற்று மாலை…
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் 2ம் ஆண்டு தொடக்க விழா மாமல்லபுரம் பூஞ்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் இன்று…