அமரன் கதையில் சிவகார்த்திகேயனா? இயக்குனரிடம் கமல் சொன்ன அந்த வார்த்தை!
நடிகர் கமல்ஹாசன் பொதுவாகவே தான் நடிக்கும் படங்களின் கதை பெரிய அளவில் மக்களை சென்று பேசப்படவேண்டும் என்பதை விரும்புபவர். அப்படி தான் அவர் படங்களை தேர்வு செய்து நடித்தும் வருகிறார். தான் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி தயாரிக்கும் படங்களும் நல்ல கதையம்சமாக இருந்தால் தான் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார்.
அந்த வகையில், அவர் தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் அமரன் திரைப்படத்தை தயாரித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு மும்மரமாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் படத்தின் சின்ன டீசர் வெளியாகி படத்தின் மீது இருந்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்தது.
இந்நிலையில், இந்த திரைப்படத்தின் கதையை முதன் முதலாக இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி கமல்ஹாசனுடன் சொல்லி முடித்து படத்தில் ஹீரோவாக சிவகார்த்திகேயனை நடிக்க வைக்கலாம் என்று சொல்லும்போது கமல்ஹாசன் என்ன சொன்னார் என்ற தகவலை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
‘அமரன்’ படத்தை தடை செய்ய கோரி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்!
இது குறித்து பேசிய ராஜ்குமார் பெரியசாமி ” முதல் முதலாக இந்த கதையை நான் கமல்ஹாசன் சாரிடம் சொன்னேன் அவர் இந்த கதைக்கு புது முகம் வேண்டும் என்று கூறினார்.நான் சிவகார்த்திகேயன் என்று கூறினேன். அதன் பிறகு அவர் ரொம்பவே அழகாக ஒன்று சொன்னார். அது என்னவென்றால் கண்டேன் சீதையை என்று கூறினார்.
பிறகு சிவகார்த்திகேயன் இந்த மாதிரி ஒரு திரைப்படத்தில் நடிக்கவில்லை அவர் இந்த படத்தில் நடித்தால் அவருக்கும் புதுவிதமான அனுபமாக இருக்கும் நீங்கள் படம் ஆரம்பிங்கள் என்று கமல்ஹாசன் கூறியதாக ராஜ்குமார் பெரியசாமி கூறியுள்ளார். விரைவில் அமரன் படம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.