விஜயகாந்தை பார்த்தாலே பயப்பட காரணம் என்ன? பொன்னம்பலம் பதில்!

Ponnambalam about vijayakanth

Vijayakanth கேப்டன் விஜயகாந்த் மீது பலரும் மதிப்பும் மரியாதையும் வைத்து இருக்கிறார்கள். 90 ஸ் காலகட்டங்களில் படங்களில் வில்லன்களாக நடிக்கும் நடிகர்கள் கூட விஜயகாந்த் மீது பயம் கலந்த மதிப்பு வைத்து இருக்கிறார்கள் என்று கூட சொல்லலாம். ஏனென்றால், விஜயகாந்தின் பேச்சுக்கு மறுவார்த்தை யாரும் பேசமாட்டார்கள்.

read more- உருவாகிறது பயோபிக்! இளையராஜாவாக நடிக்கும் தனுஷ்..இயக்குனர் இவர் தான்!!

உதாரணமாக 90ஸ் காலகட்டத்தில் முன்னணி வில்லன் நடிகராக வளம் வந்த மன்சூர் அலிகான் எல்லா இடங்களிலும் கெத்தாக பேசிக்கொண்டு இருப்பார். ஆனால், விஜயகாந்த் பக்கத்தில் இருந்தால் மிகவும் அமைதியாகவும் அடக்கமாகவும் இருப்பார். இதனை நீங்கள் பழைய வீடியோக்களை பார்த்தாலே தெரியும். மன்சூர் அலிகான் மாட்டுமின்றி நடிகர் பொன்னம்பலமும் கூட விஜயகாந்த் மீது பெரிய அளவு மரியாதை வைத்து இருக்கிறார்.

read more- மிரட்டும் சூர்யா…அதிர வைக்கும் பிரமாண்ட காட்சிகள்.. ‘கங்குவா’ படத்தின் டீசர் வெளியீடு!

இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் விஜயகாந்தை பார்த்து பழைய வில்லன்கள் நடிகர்கள் எல்லாம் பயப்படுவது ஏன் என்ற கேள்வியை தொகுப்பாளர் கேட்டுள்ளார். அதற்கு அவரும் பதில் அளித்துள்ளார். இது குறித்து பேசிய பொன்னம்பலம் ” சாதாரணமாகவே விஜயகாந்த் மனிதநேயம் கொண்ட ஒரு நல்ல மனிதர். அவரிடம் யாரும் வேலை கேட்டு போனால் கூட அவர் இல்லை என்று சொல்லவே மாட்டார்.

Read More :- நம்மளால முடியாது அண்ணா ! விஜயகாந்த் படத்தில் நடிக்க மறுத்த அஜித்குமார்?

அவரிடம் எதுவும் வேலை இல்லை என்றால் கூட பக்கத்தில் இருப்பவர்களிடம் நீ ஒரு நிறுவனம் தொடங்கி இருக்கா இவனை வேளைக்கு சேர்த்துக்கொள் என்று பார்ப்பவர்களுக்கு எல்லாம் வேலை வாங்கி கொடுப்பார். அதனைப்போலவே, சண்டைக்காட்சிகள் படமாக்கும்போது எங்களுக்கு அடிபடக்கூடாது என்று யோசிப்பார். இந்த மாதிரி நல்ல குணம் இருப்பதாலே அவர் மீது எங்களுக்கு பெரிய மரியாதை இருக்கிறது” எனவும் நடிகர் பொன்னாம்பலம் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்