90’ஸை கட்டிப்போட்ட சிம்ரன் இடுப்பு ..! அவரே உடைத்த அந்த அழகின் ரகசியம்!

Simran

சென்னை : சிம்ரன் என்றாலே நாம் நினைவுக்கு வருவது அவருடைய நடனம் தான் என்றே கூறலாம். கவர்ச்சியாகவும் சரி, ஹோம்லியான லுக்கில் சரி அவரை போல நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்துவிடுவார். இவருடைய நடனத்தை பார்த்து ரசிகர்கள் இவருக்கு வாய்த்த பெயர் தான் ‘இடுப்பழகி’. இந்த பெயர் 90-ஸ் காலகட்டத்தில் இருந்து இப்போது வரை பேசப்படும் ஒன்றாக இருக்கிறது.

காலங்கள் கடந்தாலும் சிம்ரனுக்கு என்று ரசிகர்கள் கூட்டம் இன்னுமே குறையாமல் அப்படியே இருக்கிறது. வயதாகிவிட்டதன் காரணமாக சமீபகாலங்களாக சிம்ரன் படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து கொண்டு வருகிறார். அந்த வகையில், டாப் ஸ்டார் பிரசாந்துடன் இணைந்து அந்தகன் படத்தில் நடித்து இருக்கிறார்.

இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷனில் பிஸியாக இருக்கும் நடிகை சிம்ரன் சமீபத்தில் படத்தின் ப்ரோமோஷனுக்காக சென்னையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு கொடுத்த பேட்டில் இடுப்பழகு சீக்ரெட்டை உடைத்துள்ளார்.

பேட்டியில் கலந்து கொண்ட அவரிடம் தொகுப்பாளர் சிம்ரன் மேடம் உங்களுடைய இடுப்பழகின் சீக்ரெட் என்ன? என்று கேட்டார். அதற்கு பதில் சொன்ன சிம்ரன் “இடுப்புக்கு என்று தனியாக உடற்பயிற்சி செய்வதாக எழுந்து நின்று செய்கை ஒன்றை காட்டி கூறினார்” ட்விஸ்டர் (twister) மாதிரியான உடற்பயிற்சிகளை  அந்த சமயத்தில் இருந்து இப்போது வரை மேற்கொண்டு வருவதாக சிம்ரன் தெரிவித்துள்ளார்.

சிம்ரன் தனது இடுப்பழகு பற்றிய சீக்ரெட்டை தெரிவித்துள்ள நிலையில், இதனை பார்த்த ரசிகர்கள் ஓ இது தான் அந்த சீக்ரெட்டா? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், அந்தகன் படத்துக்கு முன்னதாக சிம்ரன் அரண்மனை 4 படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடி இருந்தார் அந்த பாடலில் கூட இப்போது இருக்கும் நடிகைகளுக்கு டப் கொடுக்கும் வகையில் நடனம் ஆடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Earthquake in Myanmar
Academy Awards 2025
bussy anand
Tungsten madurai
mk stalin
annamalai