விபத்தில் காயமடைந்த சூர்யாவின் தற்போதைய நிலைமை என்ன? வெளியானது வீடியோ…

Kanguva Shoot

சமீபத்தில், கங்குவா படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தில் சிக்கிய நடிகர் சூர்யா காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று ஓய்வுக்காக முன்பை புறப்பட்டு இருக்கிறார்.

நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் சிறுத்தை சிவா ஆகியோருக்கு இடையேயான முதல் கூட்டணியைக் குறிக்கும் “கங்குவா” திரைப்படம் ஒரு பீரியட்-ஆக்சன் படமாக பிரமாண்டமாக உருவாகி வருகிறது.

அதுபோல், இந்த படத்தில் வானம், காற்று, நெருப்பு, நீர் மற்றும் நிலம் ஆகியவற்றை ஐம்பூதங்கள் அல்லது பஞ்சபூதங்கள் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஐம்பூதங்களிலும் இப்படத்தில் சண்டை காட்சிங்கள் எடுக்கப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகினது.

படத்திற்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று கொண்டு இருக்கும் நிலையில், கடந்த 23ஆம் தேதி, பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி பிலிம் சிட்டியில் சண்டை காட்சி தொடர்பான படப்பிடிப்பின் போது, எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டுள்ளது.

அதாவது, சண்டை காட்சியின்போது கேமரா அறுந்து சூர்யாவின் தோள்பட்டையில் விழுந்துள்ளது. இதில், நடிகர் சூர்யா காயமடைந்ததால் உடனடியாக சிகிச்சையளிக்க மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து, கங்குவா’ படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்ட நிலையில் நலமுடன் இருக்கிறேன் என்று குறிப்பிட்டு இருந்தார்.

தற்போது, காயத்திற்காக சிகிச்சை மேற்கொண்டு வந்த நடிகர் சூர்யா, சிகிச்சை முடிந்து வீடு திரும்புவதாக தெரிகிறது. ஆம், ஓய்வெடுப்பதற்காக மும்பை புறப்பட்டுள்ளார்,  இது  தொடர்பாக சென்னை விமானநிலையத்தில் நடிகர் சூரிய மற்றும் ஜோதிகா இருவரும் செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கவே பயங்கரமா இருக்கு! ‘காந்தாரா ஏ லெஜண்ட் சாப்டர்-1’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசர்!

விரைவில், பூரண குணமடைந்து கங்குவா படப்பிடிப்புக்கு மீண்டும் செல்லுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அண்மையில், நடிகர் சூர்யா சென்னையில் இருந்து மும்பைக்கு வீடு மாறியது குறிப்பிடத்தக்கது.

வனிதாவை தாக்கிய மர்ம நபர்…பிரதீப் ஆண்டனி வருத்தம்.! வைரலாகும் உரையாடல்..

கங்குவா

இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல பாலிவுட் கவர்ச்சி நடிகை திஷா பதானி நடிக்கிறார். படத்தை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பிரமாண்ட பட்ஜெட்டில் தயாரிகிறது படத்திற்கு இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். இந்த திரைப்படம் நடிகர் சூர்யாவின் கேரியரில் மிகப்பெரிய ரிலீஸாக பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்