நடிகர் விஜய் நடித்துள்ள பீஸ்ட் திரைப்படம் வரும் ஏப்ரல் 13-ஆம் தேதி தமிழ்,தெலுங்கு, கன்னடம்,ஹிந்தி, மலையாளம் போன்ற மொழிகளில் வெளியாகவுள்ளது. நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன்பிக்ச்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு இசையமைப்பாள அனிருத் இசையமைத்துள்ளார்.
இதனையடுத்து, பீஸ்ட் திரைப்படம் வரும் 13-ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் போஸ்டர்கள் ஒட்டி படத்தை ப்ரோமோஷன் செய்துவருகிறார்கள். அந்த வகையில், புதுச்சேரி மாநிலத்தில் பல இடங்களில் வைக்கப்பட்டுள்ள பீஸ்ட் பட பேனர்களில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி மற்றும் விஜய் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் படங்கள் இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் நீலாங்கரையில் உள்ள நடிகர் விஜய் வீட்டில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர்கள் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பேசியதாக தகவல்கள் வெளியானது. அதற்கான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது.
விரைவில் புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் வரவுள்ள நிலையில் விஜயின் பீஸ்ட் பட பேனரில் நடிகர் விஜய் மற்றும் முதல்வர் ரங்கசாமி படங்கள் இடம்பெற்றுள்ளது இதனால் , அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…