என்னது ‘துணிவு’ படம் ‘வலிமை-2’-வா..? உதயநிதி ஸ்டாலின் கூறிய அதிர்ச்சி தகவல்.!
இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்துமுடித்துள்ள ‘துணிவு” திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை தமிழகத்தில் உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் வெளியீடுகிறார்.
படத்தை தயாரிப்பாளர் போனிகபூர் தயாரிக்கிறார். படத்திற்கு இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். படத்திற்கான முதல் பாடலான அனிருத் பாடியுள்ள சில்லா சில்லா என்ற பாடல் வரும் 14-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்களேன்- அது புஜ்ஜியோட கேரக்டரே கிடையாது…மணிகண்டன் குறித்து பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ்.!
வங்கியில் பணம் கொள்ளையடிக்கும் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படம் எப்படி இருக்கும் என நாளுக்கு நாள் எதிர்பார்ப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இந்த நிலையில், ‘ துணிவு’ திரைப்படத்திலும் பைக் சேசிங் காட்சிகள் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து பேசிய உதயநிதி ” வலிமை திரைப்படத்தை போல துணிவு திரைப்படத்திலும் பைக் சேசிங் காட்சிகள் நிறைய வரும். அஜித்துக்கு பைக் ஓட்டும் காட்சிகள் இருக்குமா என்று உறுதியாக தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் வலிமை பார்ட் 2 தான் துணிவு திரைப்படமா..? என கலாய்த்து வருகிறார்கள்.