அந்த நடிகருடன் காதலா..? மனம் திறந்த நடிகை தமன்னா.!
நடிகை தமன்னா பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவைக் காதலித்து வருவதாக கடந்த சில நாட்களாகவே சமூக வலைத்தளங்களில் செய்திகள் உலாவி வருகிறது. ஏனென்றால், தமன்னாவும் விஜய் வர்மாவும் இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் மிகவும் வைரலானது. இதன் காரணமாகவே இருவரும் காதலித்து வருவதாக தகவல் பரவியது.
இதனையடுத்து, சமீபத்திய பேட்டி ஒன்றில் காதலிப்பதாக பரவும் செய்திக்கு விளக்கம் கொடுத்துள்ளார். இது குறித்து பேசிய தமன்னா ” நான் விஜய் வர்மாவுடன் 1 படத்தில் மட்டுமே நடித்திருக்கேன். அதற்குள் இதுபோன்ற காதல் வதந்தியைப் பரப்பி வருகின்றனர். இந்த வதந்தி தகவலை பற்றி நான் தெளிவுபடுத்த வேண்டிய அவசியம் எதுவும் இல்லை.
சினிமாவில் நடிகர்களை விட பல நடிகைகள் தான் இது போன்ற காதல் வதந்திகளிலும். திருமண வதந்திகளுக்குள் சிக்குகின்றார்கள். இது எதற்காக என்று எனக்கும் இன்னும் வரை தெரியவில்லை” என கூறியுள்ளார். இதன் மூலம் தமன்னா விஜய் வர்மாவைக் காதலிப்பதாக பரவும் தகவல் வதந்தி என்று தெரிய வந்துள்ளது.
மேலும், நடிகை தமன்னா தற்போது ரஜினிகாந்தின் “ஜெயிலர்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதைப்போல, தெலுங்கில் போலே சூடியன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த படங்களுக்கான படப்பிடிப்பு விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.