ஒரு பாடலுக்கு, பாடலாசிரியரும் உரிமை கேட்டால் என்னவாகும்? இளையராஜா வழக்கில் உயர்நீதிமன்றம் கருத்து.!

Ilayaraja

Ilayaraja: இசையமைப்பாளர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

எக்கோ என்ற தனியார் இசைப்பதிவு நிறுவனத்துக்கும், ஏஸ் மியூசிக் நிறுவனத்துக்கும் இடையே, திரைப்படப் பாடல்கள் தொடர்பான உரிமை தகராறு தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.

அதாவது, இசையமைப்பாளர் இளையராஜாவின் 4,500 பாடல்களைப் பயன்படுத்த எக்கோ உள்ளிட்ட இசை நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்திருந்தன. ஆனால், ஒப்பந்தம் முடிந்த பிறகும், காப்புரிமை பெறாமல் தனது பாடல்களைப் பயன்படுத்தியாக இசையமைப்பாளர் இளையராஜா வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி அனிதா சுமந்த், பாடல் வரிகள் இல்லாமல், பாடல்களில் எதுவும் இல்லை என்பதால், பாடலை உருவாக்கியவர் என, இசையமைப்பாளர் இளையராஜா கூறிக்கொள்ள முடியாது எனவும், ஒரு பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? வரிகள், பாடகர் அனைத்தும் சேர்ந்துதான் பாடல் உருவாகிறது.

வரிகள் இல்லை என்றால் பாடல் இல்லை என இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக் கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூன் மாதம் இரண்டாவது வாரத்துக்கு ஒத்திவைத்தனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்