நான் என்ன பண்றது.! என்னை யாரும் கல்யாணம் பண்ண மாட்றாங்க.! ஆண்ட்ரியா கொஞ்சல்.!

தமிழ் சினிமாவில் பாடகியாக அறிமுகமாகி பச்சைக்கிளி முத்துச்சரம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆண்ட்ரியா. ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வடசென்னை, ஆகிய திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மிகவும் பிரபலமானார்.
கடைசியாக இவரது நடிப்பில் மாஸ்டர் மற்றும் அரண்மனை 3 ஆகிய படங்கள் வெளியானது . தற்போது பிசாசு 2 , மற்றும் நோ என்ட்ரி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில் பிசாசு 2 திரைப்படம் அணைத்து வேலைகளும் முடிந்து ரிலீஸ்-ஆக தயாராகவுள்ளது. இப்படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், அண்மையில் ஆண்ட்ரியா ஊடகத்திற்கு பேட்டியளித்தார். அப்போது , நீங்கள் எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என்ற கேள்வி கேட்கப்பட்ட போது, நடிகை ஆண்ட்ரியா மிகவும் கூலாக சிரித்துகொண்டே பதிலளித்துள்ளார்.
அவர் கூறியது” நான் ஒன்னும் வேணான்னு சொல்லவில்லை… என்னை ஏன் யாரும் கல்யாணம் செய்து கொள்ள வர மாட்டிகாங்கனு … தெரியவில்லை. ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக திருமணம் செய்து கொள்ள முடியாது. நான் திருமணம் செய்துகொள்ள தகுந்த நபரை இன்னும் சந்திக்கவில்லை” என்று கூறியுள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!
April 25, 2025
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025