நடிகர் சூர்யா படத்துக்கு என்ன ஆச்சு..?

Default Image

சூர்யாவின் ‘என்.ஜி.கே.’ படத்தின் அப்டேட் குறித்து அறிந்துகொள்ள, அவருடைய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் படம் ‘என்.ஜி.கே.’. நந்த கோபாலன் குமரன் என்பதன் சுருக்கம்தான் ‘என்.ஜி.கே’. ரகுல் ப்ரீத் சிங் மற்றும் சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்கின்றனர்.

ஜெகபதி பாபு, பாலா சிங் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்க, சிவகுமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தை, ரிலையன்ஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனம் வெளியிடுகிறது.

வருகிற தீபாவளிக்கு இந்தப் படம் ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டபடி படப்பிடிப்பு முடியாததால், ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக, சூர்யா ரசிகர்களிடம் ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார் செல்வராகவன்.

‘என்.ஜி.கே.’ படத்தில் நடித்துவரும் அதேநேரத்தில், கே.வி.ஆனந்த் இயக்கும் பெயரிடப்படாத படத்திலும் நடித்து வருகிறார் சூர்யா. மோகன்லால், ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்தப் படத்தில், சயிஷா ஹீரோயினாக நடிக்கிறார்.

Related image

‘என்.ஜி.கே.’ தீபாவளிக்கு ரிலீஸாகாவிட்டாலும், அதன் அப்டேட் என்னவென்று தெரிந்துகொள்ள சூர்யா ரசிகர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். எனவே, படத்தின் தயாரிப்பாளரான எஸ்.ஆர்.பிரபுவிடம் ட்விட்டரில் ‘என்.ஜி.கே.’ குறித்து கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில், ‘என்.ஜி.கே.’ பற்றி இப்போது எதுவும் சொல்ல மாட்டேன் எனத் தெரிவித்துள்ளார் எஸ்.ஆர்.பிரபு. ட்விட்டரில் இதுகுறித்துப் பதிவிட்டுள்ள அவர், “நண்பர்களே… போஸ்ட் புரொடக்‌ஷனின் முதல் ஷெட்யூல் முடியும்வரை ‘என்.ஜி.கே.’ பற்றி எதுவும் பதிவிட மாட்டேன்.இதனால் சூரிய ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் உள்ளனர்.

DINASUVADU 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்