என்னங்க சொல்றீங்க..? இது நம்ம சிவகார்த்திகேயனா..? வைரலாகும் புகைப்படங்கள்.!!

Published by
பால முருகன்

நடிகர் சிவகார்த்திகேயன் சமீப காலமாக தான் நடிக்கும் படங்களுக்காக தன்னுடைய கெட்-அப் களை மாற்றி மாற்றி வருகிறார்.குறிப்பாக அவர் தற்போது நடித்து முடித்துள்ள மாவீரன் படத்திற்காக கூட உடல் எடையை குறைத்து ஆளே மாறியிருந்தார். இந்த நிலையில், அதனை தொடர்ந்து தற்போது அவருடைய அடுத்த படைத்திறகாக அதாவது sk21 படத்திற்காக அவர் வைத்துள்ள கெட்டப் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Sivakarthikeyan New Look [Image source : twitter/ @news_bugz]

ரசிகர் ஒருவருடன் சிவகார்த்திகேயன் எடுத்துக்கொண்ட அந்த புகைப்படத்தில் சிவகார்த்திகேயன் சற்று உடல் எடை அதிகரித்து நரைத்த தாடியுடன் இருக்கிறார். ரசிகருடன் அவர் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

Sivakarthikeyan Latest [Image source : twitter/ @Kanagavel02]

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள்  என்னங்க சொல்றீங்க..? இது நம்ம சிவகார்த்திகேயனா..? என ஆச்சரியத்துடன் கேள்வி எழுப்பி வருகிறார்கள். மேலும், இந்த கெட்டப் சிவகார்த்திகேயன் அடுத்ததாக கமல்ஹாசன் தயாரிப்பில் இயக்குனர் ராஜ் குமார் பெரிய சாமி இயக்கத்தில் உருவாகும் படத்திற்காக இருக்கும் என தெரிகிறது.

Maaveeran Ayalaan [Image source : file image ]

மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அயலான், மாவீரன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இதில் மாவீரன் திரைப்படம் வரும் ஜூலை 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதைப்போல அயலான் திரைப்படம் வரும் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 12-ஆம் தேதி வெளியாகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்

Recent Posts

“சிறந்த நடிகர்களில் ஒருவர் விஜய்”! GOAT படத்தை பாராட்டிய பாடலாசிரியர்!

சென்னை : கோட் படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அதுவும் ரிலீஸ் ஆன முதல்…

11 hours ago

“அத்தான் அத்தான்”.. அழகாக வெளியான கார்த்தியின் ‘மெய்யழகன்’ டீசர்.!

சென்னை : இயக்குனர் சி பிரேம் குமார் இயக்கத்தில் கார்த்தி மற்றும் அரவிந்த் சாமி முக்கிய வேடங்களில் நடித்துள்ள "மெய்யழகன்"…

11 hours ago

எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!

டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த…

12 hours ago

“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!

சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால்,…

12 hours ago

“வயிற்றெரிச்சல் பழனிச்சாமி., உங்களுக்கு அருகதை இல்லை .” ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனம்.!

சென்னை :  அசோக் நகர் அரசுப் பள்ளியில் மகாவிஷ்ணு என்பவர், மாற்றுத்திறனாளிகள் பற்றி சர்ச்சைக்குரிய வகையில் பேசியதும், அதனை கண்டித்த…

12 hours ago

நிச்சயம் முடிந்து 5 மாதம்: திருமணத்தை நிறுத்திய மலையாள மேக்கப் கலைஞர்.!

திருவனந்தபுரம் : கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பிரபல மேக்கப் கலைஞரும், திருநங்கையுமான சீமா வினீத், திருமணத்தில் இருந்து விலகுவதாக…

13 hours ago