நடிகர் சூர்யா தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படத்தில் நடித்து முடித்திருக்கும் நிலையில் அடுத்ததாக இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் தன்னுடைய 43வது திரைப்படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். கடைசியாக கார்த்திக் சுப்புராஜ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் எனும் மிகப்பெரிய ஹிட் படத்தை இயக்கியிருந்தார்.
எனவே, அவர் சூர்யா வைத்து ஒரு திரைப்படம் இயக்க உள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருந்த நிலையில் இந்த படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு செல்கிறது. படத்திற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எல்லாம் வெளியாகிவிட்டது ஆனாலும் படத்திற்கு எந்த இசையமைப்பாளர் இசையமைக்க போகிறார் என்ற எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
வழக்கமாக கார்த்திக் சுப்புராஜ் படம் என்றாலே சந்தோஷ் நாராயணன் தான் இசையமைப்பார். ஆனால், சூர்யாவின் 43வது திரைப்படத்தை அவர் இயக்கும் 43 படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியாகி இருந்தது. அந்த தகவலை பார்த்த சூர்யா ரசிகர்கள் பலருமே நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யாவும் அனிருத்தும் கூட்டணி வைக்க உள்ளார்கள் என்று உற்சாகத்தில் இருந்தனர்.
ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால் சூர்யாவின் 43 படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் தான் இசையமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம். இந்த தகவல் ரசிகர்களுக்கு மத்தியில் சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரும் வேளையில் நேற்று (டிசம்பர் 17) மாநிலங்களாவையில் பேசிய மத்திய உள்துறை…
சென்னை: தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, அதே…
சென்னை: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன்ராம் மெக்வால் மக்களவையில் நேற்று அறிமுகம் செய்தார்.…
மதுரை : பெண் காவலர்கள் பற்றி அவதூறாக பேசியதாக யூ-டியூபர் சவுக்கு சங்கரை கடந்த மே மாதம் கோவை போலீசார்…
சென்னை: இந்திய அரசால் அங்கீகரிப்பட்ட 24 மொழிகளில், சாகித்ய அகாதமி விருதுக்குத் தேர்வு செய்யப்படும் நூலினை எழுதிய நூலாசிரியருக்குத் தற்போது…
சென்னை : ஒவ்வொரு ஆண்டும் ரயில்வே துறை சார்பில் சிறந்த ரயில்வே ஊழியரின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக ரயில் சேவா…