ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நாட்கள் கடக்க கடக்க வீட்டில் ஏதாவது பெரிய விஷயமாக நடக்கும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கும் நிலையில், அப்படி ஒரு சம்பவமும் இன்னும் நடைபெறவில்லை என்றே கூறலாம் .
வழக்கமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இரண்டாவது நாளிலேயே ஏதாவது பிரச்சினைகள் ஆர்வமான சில சம்பவங்கள் நடைபெறும். ஆனால், இந்த முறை அந்த மாதிரி எந்த சம்பவம் நடைபெறாமல் பிக் பாஸ் வீடே மிகவும் அமைதியான வீடாக இருக்கிறது. இதற்கிடையில், நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் மக்களை காமெடி செய்து சிரிக்க வைக்கிறோம் என்கிற பெயரில் சில விஷயங்களை செய்து வருவது நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்களுக்கு எரிச்சலை கொடுத்துள்ளது.
குறிப்பாக நேற்று மணி கூல் சுரேசை வைத்து காமெடி ஒன்றை செய்திருந்தார். அதில் ஒரு முறை தான் பாத்ரூமில் அமர்ந்திருந்த போது கூல் சுரேஷ் தமிழன்டா என்று கத்தியதாகவும் அதனால் தான் மிகவும் பயந்ததாகவும் சற்று கோச்சையாக பேசினார். இதனை கேட்ட ரவீனா மிகவும் சத்தமாக வயிறு குலுங்க, குலுங்க சிரித்தார்.
அந்த வீடியோ வைரலாகி வரும் நிலையில். இதனை பார்த்த நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் அவர் சொன்ன காமெடி அந்த அளவிற்கு சிரிப்பே வரவில்லை எனவும் காமெடி என்ற பெயரில் என்னென்னவோ பண்றாங்க எனவும் கூறி வருகிறார்கள். அதைப்போல வழக்கமான பிக் பாஸ் நிகழ்ச்சியை போல இல்ல எனவும் சற்று மொக்கையாக இருக்கிறது எனவும் கூறிவருகிறார்கள்.
மேலும், ஏற்கனவே மணி மற்றும் ரவீனா பற்றிய கிசு கிசு பரவி வரும் நிலையில், இப்போது மணி சொன்ன மொக்க ஜோக்கிற்கு கூட சிரிப்பது மேலும் ரசிகர்களுக்கு எரிச்சலை கொடுத்துள்ளது. ஏற்கனவே, கடைசியாக ரவீனா மணிகண்டன் கையை கடித்தார். அதற்கான வீடியோவும் சமூக வலைத்தளங்களில் வைரலானது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…