நடிகை டாப்ஸி வெளிய நிகழ்ச்சிக்கு சென்றாலும் அவரை ஊடகங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் புகைப்படம் எடுப்பதும் அதற்கு அவர் சற்று கடுப்பாவது வழக்கமான ஒன்று தான். டாப்ஸியும் பல பேட்டிகளில் தனக்கு புகைப்படங்கள் எடுப்பது பிடிக்காது என்று கூறுவதும் உண்டு. இல்லையென்றால், புகைப்படம் எடுக்கும்போதே கோபமடைந்து திட்டிவிடுவார்.
இந்நிலையில், நடிகை டாப்ஸி சமீபத்திய பேட்டி ஒன்றில் மிகவும் கோபத்துடன் புகைப்படம் ஈடுபவர்களை பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர் ” நான் கடந்த 10 -ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறேன். நான் கேமராவுக்கு முன்னாடி மட்டும் தான் புகைப்படத்திற்கு நிற்பேன். ஊடகங்களுக்கு என்னை பற்றி நன்றாகவே தெரியும்.
இதையும் படியுங்களேன்- கல்யாண கலை வந்துடுச்சு.! திருமண கோலத்தில் பிரபல நடிகை.! வைரலாகும் புகைப்படங்கள்….
நான் என்னுடைய வீட்டிலிருந்து வெளியே செல்லும்போது மற்றவர்கள் என்னைப் புகைப்படம் எடுப்பது எனக்கு சுத்தமா பிடிக்கவே இல்லை. கார் கண்ணாடி முன் கேமராவை வைத்தும் சிலர் சில சமயங்களில் வீடியோ எடுக்கிறார்கள். இந்த மாதிரி செயல் எல்லாம் எனக்கு பிடிக்காது. என்னதான் நான் நடிகையாக இருந்தாலும் கூட, என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் தலையிட யாருக்கும் எந்த உரிமையும் இல்லை.
வெளிய நான் ஏதேனும் வாங்கவேண்டும் என்றால், பாதுகாவலர் இல்லாமல்தான் நடந்து செல்கிறேன். எனவே இதனால் என்னுடைய சுதந்திரத்தைப் பறிப்பதை சத்தியமாக அனுமதிக்கவே முடியாது. சினிமா துறையில், ஒரு நடிகையாக இருப்பதால் பல மோசமான விஷயங்களை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. என் இப்படி பண்றீங்க..? எதற்காக என்னை புகைப்படம் எடுக்கிறீர்கள்..? நான் என்ன மிருகக் காட்சிசாலையில் உள்ள மிருகமா?” என கோபத்துடன் பேசியுள்ளார் டாப்ஸி.
சென்னை : அண்மையில் புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசுகையில், பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கியவர்களை பாஜக…
திருவண்ணாமலை : இன்று (டிசம்பர் 21) பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் திருவண்ணாமலை சந்தைமேடு பகுதியில் 'உழவர் பேரியக்க மாநாடு'…
திருவள்ளூர் : தமிழ்நாடு ஊர்காவல் படை காவலர்களுக்கான காலிபணியிடங்களை நிரப்பும் அறிவிப்புகள் குறிப்பிட்ட இடைவெளியில் மாவட்ட வாரியாக அறிவிக்கப்பட்டு வருகின்றன.…
தெலங்கானா : 'புஷ்பா 2' படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க வந்த பெண் உயிரிழந்த விவகாரம் குறித்து, தெலங்கானா முதல்வர்…
ஜெய்சால்மர் : இன்று ஜிஎஸ்டி கவுன்சின் 55வது ஆலோசனை கூட்டம் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் நடைபெற்றது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தலைவரும்,…
ரஷ்யா: ரஷ்யா - உக்ரைன் இடையே ட்ரோன் தாக்குதல்கள் தினசரி நிகழ்வு என்றாலும், உக்ரைனில் இருந்து 1000 கிமீ தொலைவில்…