இளையராஜாவின் பயோபிக் படம் என்னாச்சு? தனுஷ் எடுத்த அதிரடி முடிவு!

இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தில் நடிக்க தனுஷ் உறுதியாகவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Ilayaraja Biopic

சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும் என இல்லை. அவர் நம்மளை இசை மூலம் மகிழ்வித்தாலும் அவர் ஆரம்ப காலத்தில் சினிமாவிற்குள் வருவதற்கு என்னென்ன கஷ்டப்பட்டார் என்பது பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்புகள் குறைவு தான். எனவே,  அவருடைய வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கி அதனை மக்களிடம் காண்பிக்க ஆசையும் பட்டிருந்தார்.

இதனையடுத்து, அவருடைய வாழ்கை வரலாற்று படத்தினை இயக்குனர் அருண் மாதேஷ்வரண் இயக்கவுள்ளதாகவும் படத்தில் தனுஷ் நடிப்பதாகவும் அறிவிக்கப்பட்டிருந்தது. அது மட்டுமின்றி, இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியிடப்பட உள்ளது. இளையராஜாவின் இசை பயணத்தையும், அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்வுகளையும் வெளிப்படுத்தும் வகையில்,  உருவாக்கப்படவுள்ளது.

முன்னதாக இந்த திரைப்படத்தினை ஸ்ரீராம் பக்திசரண், பத்ம குமார் சி.கே ஆகியோர் தயாரிக்க முன் வந்து இருந்தார்கள். அதன்பிறகு படத்தின் பட்ஜெட் மற்றும் தனுஷ் கால்ஷீட் பிரச்சனை காரணமாக செட் ஆகவில்லை என நினைத்ததாகவும் அவர்கள் படத்தில் இருந்து விளங்குவதாகவும் தகவல்கள் வெளியாகி இருந்தது. எனவே, இதன் காரணமாக தனுஷும் படத்தில் இருந்து விலக படம் அப்படியே நிறுத்திவைக்கப்படவுள்ளதாகவும் தகவல்கள் தீயாக பரவியது.

இந்த நிலையில், தற்போது கிடைத்திருக்கும் தகவல் என்னவென்றால், இளையராஜாவின் பயோபிக் திரைப்படத்தில் நடிப்பதில் நடிகர் தனுஷ் உறுதியாக இருக்கிறாராம். என்ன காரணம் வந்தாலும் படத்தினை மட்டும் நிறுத்தி வைக்கவேண்டாம் என முடிவெடுத்துள்ளாராம். எனவே, தற்போது படக்குழு வேறொரு தயாரிப்பு நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறதாம். பேச்சுவார்த்தை முடிந்த பிறகு படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்