நகைச்சுவை நடிகராக கலக்கி வந்த சூரி தற்போது தமிழ் சினிமாவில் விடுதலை படத்தின் மூலம் கதாநாயகனாக என்ட்ரி கொடுக்கவுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் விஜய்சேதுபதி கெளதம் மேனன், பிரகாஷ் ராஜ், பவானி ஸ்ரீ,சேதன்,கிஷோர் குமார் ஜி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.
இந்த படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.இரண்டு பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ள, இதன் முதல் பாகம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில், நேற்று படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது.
இந்த இசை வெளியீட்டு விழாவில் பேசிய சூரி காமெடியான சம்பவம் ஒன்றை கூறியுள்ளார். இது குறித்து பேசிய சூரி ” நான் விடுதலை படத்தில் நடித்துக்கொண்டிருந்த சமயத்தில், என்னை பார்க்க படப்பிடிப்பிற்கு ஒரு 10 நாளாகவே ஒரு வயதான பாட்டி வந்ததாக என்னிடம் சிலர் கூறினார்கள். ஆனால், என்னால் அவரை பார்க்கவே முடியவில்லை. பிரகிக்கு ஒரு நாள் என்னிடம் ஒரு உதவி இயக்குநர்கள் வந்து, அந்த அம்மாவின் வீடு பக்கத்தில்தான் இருப்பதாகவும், நேரில் சென்று ஆசிர்வாதம் வாங்கி விடுங்கள் என்று கூறினார்கள்.
நானும் அவருடைய வீட்டிற்கு சென்றேன். என்னை பார்த்ததும் அந்த பாட்டி வேகமாக ஓடிவந்து கட்டியணைத்து நீ நல்லா இருக்கனும் யா என்று சொன்னது. எனக்கு சந்தோசமாக இருந்தது. பிறகு அந்ந பாட்டி நீ டிவியில் பார்க்கும் போது வெள்ளையாக இருக்க நேரில் கருப்பாக இருப்பதாக சொன்னார். நான் மேக்கப் போட்டிருக்கேன் என்று கூறிவிட்டேன். பிறகு அந்த பாட்டி என் அப்பாவின் நடிப்புக்கு ரசிகர் என கூறியவுடன் எனக்கு ஷாக் ஆகிவிட்டது.
பிறகு தான் தெரிந்தது அவர் என்னை சிவக்குமாரின் மகன் சூர்யா என நினைத்து பார்க்க ஆசைப்பட்டுள்ளார். என்று. பிறகு பாட்டி யிடம் நான் சூர்யா இல்லை என்று கூறிவிட்டு இருந்தேன். அதனை கேட்டுவிட்டு அவர் கதைவை சாத்திக்கொண்டார்” என நகைச்சுவையாக பேசியுள்ளார்.
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…