இசையமைப்பாளர் டி .இமான் சமீபகாலாமாக யாருக்கும் தெரியாமல் பல உதவிகள் செய்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் நடிப்பில் வெளியான படிக்காதவன் திரைப்படத்தில் பிரபு எனும் நடிகர் ஒருவர் சிறிய கதாபாத்திரம் ஒன்றில் நடித்திருந்தார். இவர் சென்னை கோயம்பேட்டில் கேட்பார் அற்ற நிலையில் கிடைந்துள்ளாராம்.
அவரை மருத்துவமனையில், சேர்த்து அவருக்கு சிகிச்சை அளிக்க கூறி எவ்வளவு செலவு வேண்டுமானாலும் தான் கொடுக்கிறேன் என்று டி.இமான் உறுதி கூறியுள்ளாராம். பிரபுவிற்கு வாயில் புற்றுநோய் 4-வது நிலையில் இருக்கிறதாம். எனவே மருத்துமனைக்கு நேரிலே சென்று பிரபுவிற்கு சிகிச்சை அளிக்க இசையமைப்பாளர் டி.இமான் கூறியுள்ளாராம்.
அதைபோல், ரஜினிமுருகன் திரைப்படத்தில் நடித்த நடிகர் பவுன் ராஜ் கடந்த சில மாதங்களுக்கு முன்பு காலமானார். இவருக்கு 2 பசங்கள் இருக்கிறார்கள். அவருடைய மனைவிக்கும் வருமானம் இல்லை எனவே சற்று வறுமையில் அவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே இந்த தகவல் அறிந்த இசையமைப்பாளர் டி.இமான் அவர்களுக்கும் சில உதவிகளை செய்துள்ளாராம்.
இட்லி மாவு விற்பனை செய்வதற்காக பவுன் ராஜ் குடும்பத்திற்கு க்ரேண்டர், சில பாத்திரங்கள் என பல பொருட்களை வாங்கி கொடுத்து உதவி செய்துள்ளாராம். எனவே இதுவே ஒரு அறக்கட்டளை வாயிலாக செய்தால் நன்றாக இருக்கும் என்பதற்காக “D. Imman Educational Trust” என்ற பெயரில் அறக்கட்டளை ஒன்றை தொடங்கியுள்ளாராம். இப்படி தெரியாமல் பல உதவிகளை செய்து வரும் டி.இமானை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
சென்னை : தைப்பொங்கல் நாளின் மறுநாள் மாட்டுப்பொங்கல் பண்டிகை தமிழர்களால் கொண்டாட்டப்பட்டு வருகிறது. இந்த நாளில் உழவர்களின் நண்பனாக திகழும்…
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த ஆண்டுக்கான ஜல்லிக்கட்டு போட்டிகள் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. நேற்று மதுரை மாவட்டம் அவனியாபுரம்…
தெலுங்கானா : மாநிலம் ஹைதராபாத் - வாரங்கல் நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை அதிகாலை நடந்த ஒரு துயரமான சாலை விபத்து சம்பவத்தில் 2…
பீதர்: கர்நாடகா மாநிலம் பீதர் மாவட்டத்தில் ஏ.டி.எம் இயந்திரத்தில் நிரப்பப் பணம் எடுத்துச் சென்றவர்கள் மீது பட்டப்பகலில் மர்ம நபர்கள்…
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 'வணங்கான்' திரைப்படம் ஜனவரி 10ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.…
டெல்லி : அடுத்த மாதம் சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடர் தொடங்க உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்கும் 8…